இந்திய திருநாட்டின் 76-வது குடியரசு தினம் இன்று(26/01/2025) கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் நடைமுறைக்கு வந்த நாள் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.