கோட்டக்குப்பம் பகுதியில் கொசு தொல்லை அதிகரித்து வருவதால், பொதுமக்கள் நகராட்சி நிர்வாகத்திடம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். சமீபத்தில் நகராட்சிக்குட்பட்ட அனைத்து பகுதிகளும் கொசுத்தொல்லை கடுமையாக அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் அன்றாட வாழ்வில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.
முக்கியமாக, ஒரு பகுதியில் மட்டும் கொசு மருந்து தெளித்துவிட்டு, மற்ற பகுதிகளில் தெளிக்காமல் விடுவதால், கொசு உற்பத்தி குறையாமல் அதிகரித்து வருகிறது. இதனால் அனைத்து பகுதிகளிலும் உடனடியாக கொசு மருந்து தெளித்து, கொசு உற்பத்தியை தடுத்து நிறுத்த நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொசு அதிகரிப்பால் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால், பொதுமக்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதுடன், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் குறிப்பாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளித்தல், நீர்நிலைகளை சரிபார்த்தல், குப்பை கிடங்குகளை அகற்றுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்து, பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.