சவூதி அரேபியாவில் வசிக்கும் கோட்டக்குப்பம் நகர மக்கள், இன்று நோன்பு பெருநாளை பாரம்பரிய உற்சாகத்துடனும், மகிழ்ச்சியுடனும் கொண்டாடி மகிழ்ந்தனர். பள்ளிவாசல்களில் நடைபெற்ற சிறப்பு பெருநாள் தொழுகைகளில், கோட்டக்குப்பம் மக்கள் கலந்து கொண்டனர்.
தொழுகைக்குப் பின், ஒருவரையொருவர் சந்தித்து, தங்களது பெருநாள் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.