[dropcap] சு [/dropcap] மார் 70 வருடங்களுக்கு முன்பு பெருநாள் தொழுகையை தற்போதைய ஈத்காஹ் மைதானத்தில் நிறைவேற்ற அப்போதைய ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள் ஏற்பாடு செய்தார்கள். அன்றைய நிர்வாகிகள் மக்கள் நலனைபெரிதாக எண்ணி தங்கள் சக்திக்கு ஏற்றவாறு பணி செய்தார்கள் . அதற்கு பின்பு வந்த நிர்வாகிகளும் ஊரில் மக்கள் தொகை பெருக்கத்தை உணர்ந்து அதற்கேற்ப மக்கள் தொழுவதற்காக ஈத்காஹ் மைதானத்தை விரிவு படுத்த முயற்சி மேற்கொண்டார்கள். அந்த தொடர் முயற்சியின் காரணமாக ஈத்காஹ் மைதானம் அருகில் இருந்து தனியார் இடத்தை விலைக்கு கிரயம் பெற்று, ஈத்காஹ் மைதானத்தை விரிவு படுத்தி மக்கள் தொழுகையை நிறைவேற்ற வசதி செய்து கொடுத்தார்கள். இதன் காரணமாக இடப்பற்றாகுறை அன்றைய காலக்கட்டத்தில் சரிசெய்யப்பட்டது.
மக்கள் தேவையறிந்து அன்றைய நிர்வாகிகள் முழு அற்பணிப்புடன் பள்ளி மற்றும் அதன் சொத்துக்களை நிர்வகித்து வந்துள்ளனர். குறைந்த வருவாய் கிடைத்த காலத்திலேயே அன்றைய நிர்வாகிகள் மக்கள் தேவைகள் மற்றும் பள்ளி விஸ்தரிப்பு போன்ற வேலைகளை செவ்வனே செய்துவந்துள்னர்.
திருமண மண்டபம் வருமானம், பெரிய நன்கொடைகள், கடைகளின் வாடகை போன்ற வருமானங்கள் இல்லாத காலத்திலேயே அறிய பெரிய வேலைகள் செய்துள்ளார்கள். தமக்கு கிடைத்த பொறுப்பை உணர்ந்து மக்கள் நலன்கருதி வேலை செய்தார்கள். அதனால் அன்றைய நிர்வாகிகளுக்கு மதிப்பு மரியாதையும் இருந்து வந்துள்ளது. முஹம்மது சாலிஹ், லத்திப் ஹாஜியார், ஜப்பார் நாட்டாண்மை, ஹக்கீம் நாட்டாண்மை போன்றோர் ஊர் நலனுக்காகவும் பள்ளியின்வருமானத்தை பெருக்குவதற்காகவும் அரும்பணியாற்றியுள்ளார்கள். இன்று ஜாமிஆ மஸ்ஜித்தின் முக்கிய வருவாய் இனமாக கருதப்படும் திருமணம் மண்டபம் இவர்களின் காலங்களில் உருவாக்கப்பட்டது.
இதற்கு பின்னாள் வந்தவர்கள் பள்ளியின் வருவாய் இனத்தை பெருக்க கடந்த 20 வருடங்களாக எந்தவிதமான முயற்சியும் செய்யவில்லை. இந்நிலையில் இப்பொழுது இருக்கும் நிர்வாகமும் இதற்கு முன் இருந்த நிர்வாகமும் பள்ளியின் வருமானத்தை செலவு செய்பவர்களாக மட்டுமே இருக்கிறார்கள். புதிய வருவாய் இனங்களை அடையாளம் கண்டு அதற்கான தீவிர முயற்சி எடுப்பவர்களாக இல்லை. அன்றைய காலகட்டத்தைவிட இன்று நமதூர் மக்கள் இறைவன் கிருபையால் அதிக அளவு வருவாய் ஈட்டக்கூடியவர்களாவும், தாராளமாக நன்கொடை கொடுப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அவர்களை சரியான முறையில் பயன்படுத்தி கணிசமான நன்கொடைகளை திரட்டி பள்ளியின் வருமானம் கூட்டக்கூடிய பல வேலைகளை இறைவன் அருளால் எளிதில் செய்துவிடலாம். கோட்டகுப்பத்தில் இருக்கும் இரண்டு பள்ளியை (ஜாமிஆ மஸ்ஜித், புஸ்தானியா) தவிர மற்ற பள்ளிவாசல்களுக்கு நிரந்தரமான வருமானம் கிடையாது. மற்ற அனைத்து பள்ளிகளும் மாதந்திர மக்கள் சந்தா தொகையை வைத்தே நிர்வகிக்கப்படுகிறது. ஆனால் ஜாமிஆ மஸ்ஜிதில் நிர்வகிக்க இதுபோன்ற மாதாந்திர சந்தா மற்றும் நன்கொடைகள் தேவையில்லை. நம் முன்னோர்களின் முயற்சியால் இறைவன் அருளால் பள்ளியை நிர்வகிக்க தேவையான அனைத்து தொகையும் தானாக எளிதில் கிடைத்துவிடுகிறது. இதைவைத்துக்கொண்டு கடந்த 20 ஆண்டுகளாக பள்ளியின் நிர்வாகிகள் பள்ளியை எளிதில் நிர்வகிக்கிறார்கள். வெளியில் இருந்து எந்ததொகையையும் இவர்கள் கொண்டு வரவில்லை.
கடந்த 15 வருடங்களாக ஈத்காஹ் மைதானத்தில் பெருநாள் தொழுகைக்கு வருபவர்களின் எண்ணிக்ககை கணிசமாக உயர்ந்து வருகிறது. தொழுகைக்கு வருபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு இடவசதி இல்லை. தொழுகையை நிறைவேற்றும் கட்டாயத்தில் உள்ள மக்கள் அசுத்தமான இடங்களிலும், போக்குவரத்திற்கு இடையூராக நடுரோட்டிலும் நின்று தங்கள் தொழுகையை நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின கூற்றுப்படி தொழுகையை நிறைவேற்ற புத்தாடை அணிந்து தொழுகைக்கு ஈத்காஹ் வருபவர்கள், அசுத்தமான இடங்களில் பழைய கீறறுகளை விரித்தும், வைக்கோல் தரைகளில் தொழு வைத்து புத்ததாடைகள் அழுக்காடையாக மாறுகிறது. இதற்கு யார் காரணம். ஒரு மஹல்லா ஜமாத்தார்கள் அனைவருக்கும் தொழுவதற்கு போதிய இடவசதி செய்து கொடுப்பது ஒரு பெரிய நிர்வாகத்தின் பொறுப்பு! அந்த பொறுப்பை உணர்ந்து தொழுவதற்கான இடவசதி செய்து செய்து கொடுப்பதற்கான அனைத்து ஏற்படுகளை செய்யவேண்யது யார்?
பதினொறு பள்ளிவாசல்களும் ஒரே ஜமாத்ததாக ஐக்கியமாக இருக்கிறது என்று மார்தண்டிக்கொள்ளும் நாம். 11 பள்ளிவாசல் மக்கள் மற்றும் கோட்டகுப்பம் சுற்றியுள்ள முத்தியால்பேட்டை, தெபேசன்பேட்டை போன்ற ஊர்மக்கள் தொழுக்ககான இடவசதியை முறையாக செய்துகொடுக்காமல் இருப்பது எந்தவகையில் சரி? குப்பை மேட்டிலும் நடுரோட்டிலும் தொழவைப்பது முறையா? மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்ப தொழுகைக்கான இடவசதி செய்துகொடுப்பது நமது நிர்வாகத்தின் முக்கிய கடமையாகும். அதை எந்த வகையிலும் தட்டிக்கழிக்க முடியாது. இடப்பற்றகுறையை போக்க உடனடியாக வழிவகைகளை ஆராயவேண்டும்.
தற்போதை நிர்வாகத்தை குறைகூறுவது நமது எண்ணமல்ல அரிய பல சேவைகள் செய்து வரும் நமது நிர்வாகம், 4000 தலைகட்டு, 30000 மக்களை ஒன்றிணைத்து ஒரே ஜமாத்தாக நிர்வகிக்கும் பெருமை பெற்ற நமது நிர்வாகம், ஈத்காஹ் தொழுகைக்கான இடவசதியை அனைவருக்கும் ஏற்படுத்திக்கொடுக்க முழு மூச்சில் செயல்படவேண்டும். அவ்வாறு செய்யுமாயின் நமது நிர்வாகத்தின் செயல்பாடுகளை மக்கள் வெகுவாக பாராட்டப்படுவார்கள். இந்த பிரச்சனைக்கு விரைவில் தீர்வுகான நிர்வகாம் செயல்படும் என்று நம்புகிறோம்.
-குப்பத்து ராஜா