23.9 C
கோட்டக்குப்பம்
November 22, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

குடிநீருடன் கழிவு நீர் கலக்கிறதா? பரகத்நகர் மக்கள் அச்சம்!  

கோட்டக்குப்பம், பரகத் நகர் பகுதி உருவாகி கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்குமேல் கடந்துவிட்டது. அப்பகுதியில் முறையான வடிகால் வசதி இல்லமாலே இருந்து வந்துள்ளது. குடியிருப்பு வீடுகளில் இருந்து வெளியோறும் கழிவு நீர் வீட்டின் வெளியே தெருக்களிலேயே பரவி ஓடிவந்தது. வீட்டின் உள்ளே சென்றாலும் தெருக்களில் நடந்தாலும் சாக்கடை நீரில் நீந்திக்கொண்டே நடக்க வேண்டியது சூழ்நிலை.

தினம் அனுபவிக்கும் இந்த துயரங்களை அப்பகுதி மக்கள் கோட்டக்குப்பம் பேரூராட்சி அலுவகத்தில் தினம் முறையிட்டு வந்தனர். பலமுறை முறையிட்டதன் விளைவவாக சைடு வாய்க்கால் அமைக்கப்பட்டது. முதல் கட்டமாக முதல் கிராஸ், 2,3,4,5 ஆகிய குறுக்கு தெருக்களில் வாய்க்கால் அமைக்கப்பட்டது, இந்த பகுதிகளில் சரியான முறையில் வாய்க்கால் அமைக்கால் தேங்கி நிற்கும் தண்ணீரை அப்பகுதி மக்கள் தினமும் கைகளினால் தள்ளி மெயின் வாய்க்காலில் கலக்க செய்து வருகிறார்கள். இது தினமும் நடைபெற்று வருகிறது.

இரண்டாம் கட்டமாக 6,8,10,12,13 குறுக்கு தொருக்கள் மற்றும் இரண்டாவது மெயின் தெருவில் வாய்க்கால் அமைத்து தார்ரோடும் போடப்பட்டுள்ளது. இந்த பகுதிகளில் ஒரு பக்கம் மட்டும் வாய்க்கால் அமைத்து அதற்கு தகுந்தாற்போல் தண்ணீர் ஓட ரோடு ஒரு பக்கம் சாய்வாக போடப்பட்டடுள்ளது.  இப்பகுதிகளில் அமைக்கப்பட்ட சைடு வாய்க்காலில் 6 தெருக்களில் உள்ள வீடுகளில் இருந்து வெளியோறும் கழிவு நீர் எங்கு சென்று வெளியோற்றுவது என்ற சரியான வடிகால் வசதிகள் திட்டமிடாமல் சைடு வாய்க்கால் மட்டும் அமைக்கப்பட்டது. பணிகள் முடியும் தருவாயில் அந்த கழிவு நீர்களை அவசரகதியில் வெளியோற்றும் நோக்கில் பரகத்நகர் பகுதியில் குடிநீர் சேவை வழங்கும் கீழ் நிலை தொட்டியின் (சம்ப்) அருகில் பேட்டை பள்ளிவாசலுக்கு சொந்தமான காலி இடத்தில் வழிகாட்டப்பட்டு தற்போது அனைத்து கழீவு நீரும் அங்கு தேங்கி நிற்கிறது.

சின்னகோட்டக்குப்பம் உச்சிமேட்டு பகுதியில் இருந்து ஆழ்துளை பம்புகள் மூலம் பெறப்படும் குடிநீர் பெரிய பைப்புகளின் வழியாக பரகத் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் கீழ்நிலை தொட்டியில் சேகரிக்கப்பட்டு அந்த நீரை மேல்நிலை தொட்டிக்கு ஏற்றப்பட்டு பரகத் நகர் பகுதி முழுவதும் குடிநீர் வநியோகிக்கப்ட்டு வருகிறது. சின்னகோட்டக்குப்பம் உச்சிமேட்டு பகுதியில் இருந்து இரண்டு பெரிய குழாய்களின் வழியாக வரும் குடிநீர் ஒன்று பரக்கத் நகர் கீழ் நிலை தொட்டிக்கும் இன்னொன்று கோட்டக்குப்பம் பகுதிக்கும் செல்கிறது. இதில் என்ன கொடுமை என்றால் இந்த இரண்டு குழாய்களை தரையில் பதிக்கப்பட்ட பரகத் நகர் பகுதியில்தான் தற்போதைய 6 தெருக்களின் கழிவு நீர் தேங்கி உள்ளது. இந்த குழாய்களுக்கு மேலேதான் வாய்க்கால் கட்டப்பட்டுள்ளது. இந்த குழாய்களுக்கான ஏர்பைப் (காற்று வாங்கும் பைப்) இந்த வாய்க்காலின் நடுவே அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது கழிவு நீர் தேங்கி உள்ள பேட்டை பள்ளிவாசல் இடத்திற்கும் பரகத் நகர் பகுதிக்கு குடிநீர் வழக்கும் சம்ப் தொட்டிக்கு நடுவே ஒரு ஒற்றைகல் சுவர் மட்டுமே உள்ளது. ஏற்கனவே அந்த சம்ப் தொட்டியில் சிறு சிறு கசிவுகள் ஏற்பட்டு சரிசெய்யப்பட்ட நிலையில், தற்போது அந்த சம்ப் தொட்டியை சுற்றி சுமார் 3 அடி ஆழத்திற்கு கழிவு நீர் கடந்த இரண்டு மாதமாக தேங்கி நிற்கிறது. தேங்கி நிற்கும் கழிவு நீர் மக்களுக்கு குடிநீர் வழங்கும் சம்ப் தொட்டியில் உள்ளே கலந்திருக்கும் என்று அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.
இது சம்பந்தமாக அப்பகுதி மக்கள் பல தடவை பேரூராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் இதுவரையில் சரியான தெளிவான நடவடிக்கை இல்லை. அப்பகுதி பள்ளிவாசல் நிர்வாத்தின் மூலமும், பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தின் மூலமும் மனுக்கள் அளிக்கப்பட்டும் இதுவரையில் நடவடிக்கை இல்லை.

தொற்று நோய்கள் சர்வ சாதாரணமாக பரவும் இக்காலத்தில் இந்த தண்ணீரை குடிக்கும் பரகத் நகர் மற்றும் கோட்டக்குப்பம் பகுதியை சேர்ந்த ஆயிரக்காணக்கான மக்களின் சுகாதாரத்தில் அக்கரை இல்லாமல் இருப்பது மிகவும் வேதனையான செய்தியாக உள்ளது.

புதிய வீடு கட்ட 1000 சதுர அடி வீட்டிற்கு அங்கீகாரம் பெற 50 ஆயிரத்திற்கும் மேல் கட்டணம் வசூலித்தும், சொத்து வரி ஆயிரக்கணக்கில் வசூலிக்கப்படுகிறது டெவலப்மெண்ட் சார்ஜ், குடிநீர் கட்டணம், குப்பை அள்ளும் கட்டணம் இவ்வாறு அனைத்து கட்டணங்களையும் வசூலித்து மக்களுக்கு தேவையான சுகாதாரமான அடிப்படை வசதிகளை செய்யாமல் இருப்பது என்ன நியாயம் என்று மக்கள் கேள்வி கேட்கிறார்கள்?

மக்களின் இந்த நியாயமான அடிப்படையான கோரிக்கையை ஏற்று உடனடியாக அந்த கழிவு நீர் வெளியோற சரியான திட்டமிடலுடன் ஆவணம் செய்யவேண்டும் என்று கோரிக்கை வைக்கப்படுகிறது.  செய்வார்களா?

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் நாளை மெகா கொரோனா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் ஆர்ப்பரிக்கும் லைலத்துல் கத்ர் இரவு. (புகைப்படங்கள்)

டைம்ஸ் குழு

குடிநீர் கேட்டு பர்கத் நகர் மக்கள் பேரூராட்சி மன்றம் முற்றுகை..

Leave a Comment