23.9 C
கோட்டக்குப்பம்
November 24, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள்

அலங்கரிக்கப்படும் ஜாமிஆ மஸ்ஜித் மற்றும் புஸ்தானிய்யா பள்ளிவாசல்கள்!

கோட்டக்குப்பத்தை சுற்றி 11 சுன்னத்வல் ஜமாத் பள்ளிவாசல்கள் இறை கட்டளைகளை நிறைவேற்ற இயங்கி வருகிறது. அந்தந்த பள்ளிவாசலுக்கும் தனித்தனி நிர்வாகம் இயங்கி வந்தாலும் இவை அனைத்து ஜாமிஆ மஸ்ஜித் என்னும் பெரிய பள்ளிவாலுக்கு உட்பட்டு இயங்கி வருவது நாம் அறிந்ததே. அந்தந்த பள்ளிக்கு ஒரு குறிப்பட்ட சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நிர்வாகம் மாற்றி அமைக்கப்பட்டு சிறப்பாக பராமரிக்கபட்டு வருகிறது.

அதன்படி கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் தற்போதைய நிர்வாகம் கடந்த 20 மாதங்களாக பொறுப்பேற்று பள்ளிவாசலை பராமரித்து வருகிறார்கள். கடந்த காலங்களில் பள்ளியின் நிர்வாகிகளாக இருந்தவர்கள் தங்களின் நிர்வாக காலத்தில் ஊருக்கும் பள்ளிவாசலுக்கு நல்ல பல வசதிகளை செய்து கொடுத்துள்ளார்கள். முன்பு நிர்வாகிகளாக இருந்தவர்கள் தற்பேதைய திருமண மண்டபம், வணிக வாளகங்களை உருவாக்கி பள்ளிவாசலுக்கென்று நிரந்தர வருவாயை உருவாக்கி தந்துள்ளார்கள். மேலும் அந்தந்த கால கட்டத்திற்கு ஏற்ப பள்ளிவாசலை மெருகேற்றி வந்துள்ளார்கள். அழகு படுத்தி வந்துள்ளார்கள்.

அதன் தொடர்ச்சியாக தற்போதைய நிர்வாகம் உள்பள்ளியை அழகு படுத்தும் வேலையை செய்து வருகிறார்கள். உள் பள்ளியின் உள் சுவரை சுற்றி அழகிய வண்ணங்களினால் ஆன டைல்ஸ் பதிக்கும் வேலை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது. இறைவன் இல்லத்தை தொழுகையினால் அலங்கரிப்பதுபோல் அழகிய கட்டுமானத்தினாலும் தற்பொழுது அலங்கரிப்பது மிகச் சிறந்த பணியாகம். இப்பணியை செய்துவரும் நிர்வாகிகளுக்கு நாம் துஆ செய்வோம்.

அதுபோல் கோட்டக்குப்பம் புஸ்தானிய்யா (கடைத்தெரு) பள்ளிவாசலில் கடந்த கால நிர்வாகிகள் பெரும் தியாகத்தினால் பள்ளிவாசலை நிர்வகித்து வந்துள்ளார்கள். சுமார் 12 வருடங்களுக்கு முன்புவரை பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் இருந்த கடைகளின் மூலம் கிடைத்த சிறிய தொகைகளை வைத்துக்கொண்டு தங்களுடைய பங்களிப்பை செலுத்தி புஸ்தானிய்யா பள்ளிவாசலை நிர்வகித்துவந்த நிர்வாகிகள் போற்றுதலுக்குரியவர்கள்.

அதன் பிறகு ஏற்பட்ட புதிய நிர்வாகிகள் தங்களின் முயற்சியால் இறைவன் அருளால் பழைய கடைகளை அப்புறப்படுத்திவிட்டு அதே இடத்தில் புதிய கடைகளை கட்டியும் மேற்கொண்டு சில கடைகளின் கட்டியும் கணிசமான அளவிற்கு வருவாயை பெருக்கி 12 வருடங்களுக்கு முன்பு இருந்து நிதி நெருக்கடிகளை போக்கினார்கள். ஜூம்ஆ நாட்களில் ஏற்படும் இடப்பற்றாகுறையை போக்க கீழ்தளத்தை போன்று மேல்தள பள்ளி கட்டப்பட்டு இடப்பற்ற்குறை போக்கப்பட்டது. பள்ளிக்கு அழகிய மினவ்வராவை அமைத்து ஊருக்கு ஒரு புதிய அடையாளத்தை ஏற்படுத்தினார்கள்.

தற்பொழுது புஸ்தானிய்யா பள்ளியில் கடந்த 3 மாதங்களாக புதிய நிர்வாக கமிட்டி அமைக்கப்பட்டு நிர்வாகம் நடைபெற்று வருகிறது. தற்பொது உள்ள நிர்வாகிகளும் பள்ளியை மேலும் அலங்கரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நன்கொடையாளர்களின் உதவியுடன் பள்ளியில் தொழுகை நடைபெறும் கீழ் தளத்தில் அழகிய கார்பெட் (முசல்லா கம்பளம் ) அமைத்துள்ளார்கள்.

இவ்வாறு கோட்டக்குப்பம் பகுதியில் பள்ளியின் நிர்வாகிகளாக வருபவர்கள் தங்களுடைய நிர்வாக காலத்தில் இறை இல்லத்தை மேலும் மெருகூட்டும் செயலை செய்து வருவது அனைத்தும் பாராட்டுதலுக்குரியது.

[highlight] புஸ்தானிய்யா பள்ளி: [/highlight]

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாநாடு

கோட்டக்குப்பம் பேரூராட்சி மற்றும் சுகாதாரத்துறை இணைந்து ‘ஆர்சனிக் ஆல்பம் 30’ மருந்து வீடு வீடாக வழக்கப்பட்டுவருகிறது.

கோட்டக்குப்பம் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு முக்கிய அறிவிப்பு.

டைம்ஸ் குழு

Leave a Comment