14 ஜூன்2020., #கோட்டக்குப்பத்தில் “இரத்ததான கொடையாளர்கள் பாராட்டு நிகழ்ச்சி” உலக ரத்ததான கொடையாளர்கள் தினமான இன்று கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சமூக இடைவெளி கடைப்பிடித்து நடைபெற்றது.உலக சுகாதார நிறுவனம் ஆண்டுதோறும் ஜூன் 14-ஆம் தேதி இரத்த தானத்தை ஊக்குவிக்கும் பொருட்டு உலக ரத்ததான தினம் கடைப்பிடிக்கப்படுகின்றது.
இந்நிகழ்ச்சியில் வானூர் வட்ட சுகாதாரத்துறை மருத்துவ அலுவலர் டாக்டர் ஜெயபிரகாஷ் அவர்கள் கலந்துகொண்டு ரத்ததானம் வழங்குவது குறித்து விளக்கம் அளித்தார். விழுப்புரம் மாவட்ட பேரிடர் மேலாண்மை திட்ட அலுவலர் வாசுதேவன் அவர்கள் மற்றும் கோட்டக்குப்பம் சுகாதார ஆய்வாளர் ரவி அவர்கள் கடந்த ஆண்டு தன்னார்வ இரத்ததான கொடையாளர்களுக்கு மற்றும் மருத்துவ சேவை செய்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கினார்கள்.
இந்நிகழ்ச்சிக்கு கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொதுநலச் சங்க நிர்வாகிகள் சபீர், சாதிக், காதர்,பாருக், யாசின், ஷரஃபுதீன் மற்றும் சமூக சேவர்கள் அப்துல் ரஷீத், பயாஸ் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இப்படிக்கு,
இரத்ததானம் மற்றும் மருத்துவ சேவைப் பிரிவு
கோட்டக்குப்பம் இஸ்லாமிய பொது நலச் சங்கம்
கோட்டக்குப்பம் – 605104