April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

புது வடிவம் பெறும் கோட்டக்குப்பம் காந்தி ரோடு: சைடு வாய்க்கால் மற்றும் நடைபாதை அமைப்பு.

கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லையிலிருந்து பரகத் நகர் வரை காந்தி ரோட்டின் மேற்குப்பகுதியில் கால்வாய் அமைக்கும் பணிகள் நடைபெறுகிறது. கடந்த மூன்று மாதங்களாக இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது. முதலில் மேற்சொன்ன பாதையில் கால்வாய் அமைக்கப்பட்டு அதன் மேல்புறம் மூடப்படுகிறது. அதை ஒட்டி உள்ள காலியிடத்தில் நடைபாதைக் என்று நடைபாதை கற்கள் பதிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.

கடந்த மூன்று மாதங்களாக இந்த பணிகள் நடைபெறுவதால் அப்பகுதியில் போக்குவரத்து நெருக்கடி இருந்து வருகிறது. மேலும் இப்பணிகளில் இப்பகுதி வியாபாரிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகிறார்கள். ஏற்கனவே கொரானா நெருக்கடிகளினால் 70% வியாபாரம் பாதித்த நிலையில், தற்போது இந்த பணிகளாலும் வியாபாரம் பாதித்து உள்ளதாக வியாபாரிகள் கூறிவருகிறார்கள். ஆகவே மேற்படி பணிகளை மிகத் துரிதமாக முடித்து பொது மக்களுக்கும் வியாபாரிகளுக்கும் உதவிட வேண்டும் என்ற கோரிக்கையும் வலுக்கிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் சீரான மின் வினியோகம் கோரி மின்வாரியத்துக்கு இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கோரிக்கை மனு!

டைம்ஸ் குழு

பத்ரிய்யா தீனியாத் மக்தப் மதரஸா மஸ்ஜிதே ஸல்மான் 4-ம் ஆண்டு விழா

‘பெருநாளின் சுன்னத்துக்கள்‌’ – மெளலவி. அல்ஹாபிழ். N. அக்பர் சாதிக் ஸலாஹி பாஜில் மழாஹிரி

Leave a Comment