தமிழகத்தில் கொரானா தாக்கம் அதிகரித்து வருவதால் ஜூலை மாதம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமைகளில் தளர்வுகள் அற்ற முழு அடைப்பு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக கோட்டக்குப்பத்திலும் முழு அடைப்பு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. தமிழக பகுதி கோட்டக்குப்பத்தில் கடை அடைப்பட்டாலும் அருகிலுள்ள புதுச்சேரியில் வழக்கம் போல செயல்பட்டு வருவது சமீப நாட்களில் புதுச்சேரியில் கொரானா தாக்கம் அதிகரித்து வருகிறது.
மேலும் புதுச்சேரி மக்கள் இந்த முழுஅடைப்பு நாட்களில் கோட்டக்குப்பத்தில் அதிக அளவில் வந்து செல்வதால் இங்கும் கொரானா தொற்று அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று கருதி கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை எல்லையில் காந்தி ரோட்டில் போலீசாரால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு புதுச்சேரியில் இருந்து யாரும் கோட்டக்குப்பம் பகுதிக்கு வராத வண்ணம் தடுக்கப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி முத்தியால்பேட்டையில் சமீப நாட்களில் அதிக அளவில் கொரானா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில் போலீஸ் அதிகாரிளின் நடவடிக்கை முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த தடுப்பானது இன்று மட்டும் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த முழு அடைப்பில் மருத்துவம், பால் போன்ற அத்தியாவசிய பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
சமீபமாக புதுச்சேரியில் தொற்று அதிகரித்து வருவதால் கோட்டக்குப்பம் மக்கள் புதுச்சேரிக்கு அத்தியாவசியத் தேவை இன்றி தேவையில்லாமல் செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஞாயிற்றுக்கிழமையில் முக்கிய சாலை அடைக்கப்பட்டுள்ளதால் கோட்டக்குப்பம் முத்தியால்பேட்டை பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.