Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் பழைய பட்டினப்பாதையில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி….

கோட்டக்குப்பம் பழைய பட்டின பாதையில் சாலை அமைக்கும் பணிக்காக வேலைகள் தொடங்கியது. அதன் முதல் கட்டமாக பழைய பாதை ரகுநாதன் கிளினிக் முதல் புறா தோப்பு வரை உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை உள்ளூர் நிர்வாகம் மேற்கொண்டது.

அதன்படி கடந்த 20 நாட்களுக்கு முன்பு தேவி தியேட்டர் அருகில் இருந்த சில வீடுகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது.

அப்பகுதியில் இருந்த சில வீட்டினர் நாங்கள் இதை பட்டா இடத்தில் தான் கட்டியுள்ளோம், எங்கள் வீட்டை இடிக்க கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தனர்.

எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் அந்த இடத்தில் மேற்கொண்டு வேலைகள் செய்யாமல் மற்ற பகுதிகளில் வேலை செய்து வந்தனர். மேலும் சாலை அமைப்பதற்காக ஜேசிபி மூலம் ரோடுகளில் பழைய ஜல்லிகளை கீறி விட்டு அதன் மேல் புதிய ஜல்லி போடுவதற்கான ஆயத்தப் பணிகளை கடந்த இரண்டு நாட்களாக வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று மேற்படி தேவி தியேட்டர் அருகில் இருந்த முன்னர் எதிர்ப்பு தெரிவித்த வீடுகளில் இருந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை மேற்கொண்டனர்.

வீட்டின் முன் பகுதிகள் ஜேசிபி எந்திரம் மூலம் உடைக்கப்பட்டு ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை காவல்துறை பாதுகாப்புடன் உள்ளூர் நிர்வாக அதிகாரிகள் இன்று மேற்கொண்டனர்.

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்காக வீட்டின் முன்பகுதியில் இடித்த பொழுது வீட்டு உரிமையாளர்கள் பெரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களின் சமாதானம் செய்து அதிகாரிகள் அவர்கள் கண்முன்னே வீட்டின் முன் பகுதியை இடித்தனர்.

சுமார் பத்திற்கும் மேற்பட்ட வீடுகள் ஆக்கிரமிப்பில் கட்டப்பட்டுள்ளது என்று காரணம் கூறி வீட்டின் முன்பகுதியில் ஜேசிபி இயந்திரங்கள் மூலம் இடிக்கப்பட்டன.

வீட்டு உரிமையாளர்களின் கண்முன்னே அவர்களின் வீடுகள் இடிக்கப்பட்டு வருவதால் அப்பகுதி பெரும் பரபரப்பாக காணப்படுகிறது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு 400 பயனாளிகளுக்கு வினியோகம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் நடைபெற்ற மாபெரும் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை 17-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

Leave a Comment