கொரானா காலகட்ட நெருக்கடிகளை கருத்தில் கொண்டு கோட்டகுப்பம் மற்றும் சுற்றுவட்டார மக்கள் மருத்துவ சிகிச்சை உடனடியாக பெற வேண்டும் என்ற நோக்கத்தில் புதிய சுகாதார மையத்தை டாக்டர் ஹைருல் இஸ்லாம் அவர்களின் ஏற்பாட்டின் பெயரில் இன்று திறந்து வைக்கப்பட்டது.
புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அவர்கள் திறந்து வைத்தார்கள்.
மருத்துவமனையின் மருந்தகத்தில் பிரிவை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில முதன்மை துணைத்தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் அவர்கள் திறந்து வைத்தார்கள்.
மருத்துவர் அறையை சுகாதார ஆய்வாளர் ரவி அவர்களும் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீத் அவர்களும் திறந்து வைத்தார்கள்.
பரிசோதனை கூடங்களை விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் அவர்களும் திறந்து வைத்தார்கள்.
முன்னதாக ஊரின் முக்கியப் பிரமுகர்கள் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள் ரப்பானியா அரபிக்கல்லூரி நிர்வாகிகள் அரசியல் கட்சித் தலைவர்கள் மருத்துவமனை திறப்புவிழா சிறப்பு குறித்து வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி முஹம்மது பாருக் அவர்களும் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகளும் கலந்து கொண்டார்கள்.
நிகழ்ச்சிக்கு வந்தோரை கேவிஆர் மருத்துவமனை பொறுப்பாளர் வி ஆர் முகம்மது இப்ராகிம் அவர்கள் வரவேற்றும், நிகழ்ச்சிக்கு விழுப்புரம் மாவட்ட முஸ்லீம் லீக் செயலாளர் அமீர் அப்பாஸ் அவர்கள் தலைமை தாங்கியும், செய்தியாளர் அமீர் பாஷா அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும், அஞ்சுமன் நுஸ்ரத்துல் இஸ்லாம் பொதுச்செயலாளர் லியாகத்தில் அவர்கள் மருத்துவமனையின் அவசியம் குறித்தும் வாழ்த்தி பேசினார்கள். இறுதியாக பிலால் முஹம்மது அவர்கள் நன்றியுரை கூறி நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.
ஊர்மக்களின் சிரமத்தை உணர்ந்து துவங்கப்பட்டுள்ள இந்த மருத்துவமனையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.