24.1 C
கோட்டக்குப்பம்
November 25, 2024
Kottakuppam Times
செய்திகள் புதுச்சேரி செய்திகள்

புதுவையில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு அமல்.. மக்கள் வெளியே வரக் கூடாது!

நிவர் புயல் காரணமாக புதுச்சேரியில் இன்று முதல் 3 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் முன்னெச்சரிக்கையாக புதுச்சேரியில் 144 தடை உத்தரவு இன்று இரவு 9 மணி முதல் 26ஆம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் நிவர் புயல் நிலைக் கொண்டுள்ளது. இந்த புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம்- காரைக்கால் இடையே கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சென்னை, கடலூர், விழுப்புரம், புதுவை, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன

இந்த பகுதிகளில் பேரிடர் மீட்பு குழுவினர் தயார் நிலையில் உள்ளனர். இந்த பகுதிகளில் மிக அதிக கனமழைக்கு வாய்ப்பு என அறிவிக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள்.

புதுவை கடற்கரையில் 7-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுவையில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜமியத் நகர் கிளை தமுமுக சார்பாக 150-க்கும் மேற்பட்ட எளிய குடும்பங்களுக்கு மழை நிவாரணம்…

பரகத் நகர் இளைஞர்கள் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி…

ஜமாஅத்துல் உலமா சபை சார்பில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம்

Leave a Comment