23.9 C
கோட்டக்குப்பம்
November 24, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள் செய்திகள் பிற செய்திகள்

விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை

விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை:

பள்ளி கட்டிடங்கள், திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்

அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவு

விழுப்புரம், நவ.24–

‘-நிவர்’ புயல் எதிரொலி காரணமாக விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி கட்டிடங்கள், திருமண மண்டபங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அமைச்சர் சி.வி.சண்முகம் உத்தரவிட்டார். விழுப்புரம் மாவட்டத்தில் ‘நிவர்’ புயல் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் நடைபெற்றது. கலெக்டர் அண்ணாதுரை முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயல் தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய அனைத்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அதிகாரிகளிடம் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

புயல் பாதிப்பினால் பாதிக்கப்படும் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்கு ஏதுவாக பல்நோக்கு புயல் பாதுகாப்பு மையங்களில் அடிப்படை வசதிகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். மேலும் பள்ளி கட்டிடங்கள், திருமண மண்டபங்கள், சமுதாய கூடங்களையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளும், பணியில் இருக்க வேண்டும், மரக்காணம், வானூர், கோட்டக்குப்பம், திண்டிவனம் பகுதியில் அனைத்து ஊராட்சிகளிலும் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளில் தண்ணீரை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்.

விழுப்புரம் மாவட்ட கிராம நிர்வாக அலுவலர்கள், அவர்கள் பணிபுரியும் கிராமத்தில் 3 நாட்கள் தங்கியிருந்து புயல் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.நெடுஞ்சாலைகளில் விழும் மரங்களை உடனடியாக அகற்ற பொக்லைன் எந்திரங்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும், பொதுமக்களுக்கு அடிப்படை தேவையான பால், மின்சாரம் தட்டுப்பாடின்றி கிடைக்க அதிகாரிகள் தயார் நிலையில் இருக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் நிவர் புயலை வெற்றிகரமாக சமாளித்து பொதுமக்களுக்கு எந்த ஒரு பிரச்சினையும் ஏற்படாதவாறு அதிகாரிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், சக்கரபாணி எம்.எல்.ஏ., கூடுதல் கலெக்டர் ஸ்ரேயா பி.சிங், திட்ட இயக்குனர் மகேந்திரன், விழுப்புரம் கோட்டாட்சியர் ராஜேந்திரன், திண்டிவனம் சப்-கலெக்டர் அனு மற்றும் வருவாய், பேரிடர் மேலாண்மை துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சி துறை, உள்ளாட்சி துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, சுகாதாரத்துறை, காவல்துறை, தீயணைப்புத்துறை, மின்வாரியத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் வணிகர் சங்கத்தின் சார்பாக இன்று தொழில் உரிமம் முகாம் நடைபெற்றது.

கோட்டக்குப்பத்தில் இன்று மாலை 4-மணி அளவில் கண்டன ஆர்ப்பாட்டம்.

நீங்களும் அரசு அதிகாரிகளாக ஆகலாம்! நமதூர் மாணவர்கள் மற்றும் பட்டதாரி இளைஞர்களுக்காக ஓர் அரிய வாய்ப்பு! UPSC, SSC, TNPSC போன்ற போட்டி தேர்வுகளுக்கு பயிற்சி முகாம்.

டைம்ஸ் குழு

Leave a Comment