நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று முற்பகல் அளவில் கோட்டக்குப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் மின்தடை செய்யப்பட்டது. அதன் பிறகு, மரக்காணம் அருகே நேற்று நள்ளிரவு நிவர் புயல் கரையை கடந்தது. அதன் தாக்கத்தால் கோட்டகுப்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த காற்றுடன் கூடிய மழை இரவு முழுவதும் கொட்டி தீர்த்தது.
புயலின் போது ஏராளமான இடங்களில் இரவு நேரத்தில் சாலைகளில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகள் முறிந்து விழுந்தன. இதனை அப்புறப்படுத்தும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது
தற்போது புயலின் தாக்கம் குறைந்த நிலையில், மின் வினியோகம் எப்பொழுது வரும் என்று மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இது சம்பந்தமாக கோட்டகுப்பம் டைம்ஸ் குழு, மின் வாரியத்திடம் தொடர்பு கொண்டபோது:
ஆரோவில் பகுதியில் மரங்களை அப்புறப்படுத்தும் பணி தற்போது நடைபெற்று வருகிறது எனவும், இந்த பணி முடிந்த பின் இன்று இரவுக்குள் மின்வினியோகம் திரும்ப வழங்கப்படும் என தெரிவித்தனர்.