கோட்டக்குப்பம் பழைய பட்டினம் பாதையில் உள்ள சைடு வாய்க்கால்களை கோட்டக்குப்பம் பேரூராட்சி சார்பில் தூர் வாருவதற்காக, மேலே போடப்பட்டிருந்த சிமென்ட் சிலாப்புகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது.
சுத்தம் செய்யப்பட்ட வாய்க்கால்களை, மீண்டும் மூடாமல் அப்படியே திறந்து விட்ட காரணத்தால் கடந்த சில திங்களாக பல விபத்துக்களும் ஏற்பட்டுள்ளது.
நேற்று இது சம்பந்தமாக இணையதளத்திலும் மற்றும் முகநூல் பக்கங்களிலும் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதை அறிந்த திமுக விழுப்புரம் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயமூர்த்தி மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி அப்துல் சமது ஆகியோர், இன்று காலை பார்வையிட்டு உடணடி நடவடிக்கை எடுக்க கோட்டக்குப்பம் செயல் அலுவலரிடம் பேசி சம்மந்தப்பட்ட பொரியாளருடன் கலந்து ஆலோசித்தனர்.
இது சம்மதமாக அதிகாரிகள் நாளை முதற்கட்டமாக பட்டினத்தார் தெரு மற்றும் மரைக்காயர் தெரு 1 ஆகிய தெருக்களுக்கு செல்லும் பாதையை சரிசெய்யபடும் எனவும், மேலும் மற்ற பகுதிகளில் விரைவில் சரிசெய்யபடும் என்றும் அதுவரை மணல்மூட்டை கொண்டு தடுப்புகள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்தனர்.
இவர்களுடன் கோட்டக்குப்பம் டைம்ஸ் குழு, மீடியா சாதிக், அஸ்கர் அலி மற்றும் முகமது இப்ராஹிம் அவர்கள் உடன் இருந்தனர்.