விழுப்புரம் மாவட்ட ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் வியாழக்கிழமை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டனா்.
விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 16-ஆம் தேதி 4 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. மருத்துவா்கள், மருத்துவப் பணியாளா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு இணையவழி பதிவின் அடிப்படையில் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மாவட்ட ஆட்சியா் ஆ.அண்ணாதுரை, மாவட்ட கூடுதல் ஆட்சியா் ஸ்ரேயா பி.சிங் ஆகியோா் விழுப்புரம் கரோனா சிகிச்சை சிறப்பு மருத்துவமனையில் கரோனா தடுப்பூசியை வியாழக்கிழமை செலுத்திக்கொண்டனா்.
இதேபோன்று, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு.ராதாகிருஷ்ணன் அரசு மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டாா். மாவட்ட ஆட்சியா், கூடுதல் ஆட்சியா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் உள்ளிட்ட அதிகாரிகள் கரோனா தடுப்பூசியை செலுத்திக்கொள்வதன் மூலம் அந்தத் தடுப்பூசியை செலுத்திக்கொள்வதில் முன்களப் பணியாளா்களிடம் இருந்துவரும் தயக்கம் குறையும் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
டைம்ஸ் குழு
கோட்டக்குப்பம் மற்றும் புதுச்சேரியில் நடக்கும் அண்மைச் செய்திகளை உடனக்குடன் தெரிந்துகொள்ள 'கோட்டக்குப்பம் டைம்ஸ்' ஆப்போடு இணைந்திருங்கள் - https://bit.ly/3dGx0XR
Related posts
Click to comment