உலகை அச்சுறுத்தும் கொரோனா பெருந்தொற்றிலிருந்து மக்களை காக்கும் சேவையில் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.
கொரோனா நோய்த் தொற்றை தடுக்க இரண்டு கட்டங்களாக அரசு பணியாளர்களுக்கும், முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டு வந்த நிலையில்,
தொடர்ந்து மூன்றாம் கட்டமாக இன்று மார்ச் 01-03-2021 முதல், பொது மக்களில் 45 வயதுக்கு மேற்பட்ட நீரழிவு சக்கரை நோய், இரத்த அழுத்த நோய், இதய நோய் ஆகிய இணைநோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி முற்றிலும் இலவசமாக போடும் முகாம் அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மரூத்துவமனைகளிலும் நடைபெற உள்ளது.
கொரோனா தடுப்பூசி முகாமில் பயனாளிகள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ள அக்கறையுடன் கேட்டுக்கொள்கிறோம்.
தடுப்பூசி போடவரும் பயனாளிகள் அனைவரும் தங்களின் அடையாளத்திற்காக:
- பான் கார்டு
- டிரைவிங் லைசன்ஸ்
- குடும்ப அட்டை ஸ்மார்ட் கார்டு
- ஆதார அட்டை
- வங்கி கணக்கு எண்
__ இவற்றில் ஏதாவது ஒன்றின் ஜெராக்ஸ் கொண்டு வர வேண்டும்.
மேலும் கீழ்கண்ட இடங்களிலும் தடுப்பூசி செலுத்தப்படுகிறது,
- கிளியனூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
- குன்னம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
- உப்புவேலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
- பொம்பூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்.
கொரானா நோய் தடுப்பில் அரசு எடுக்கும் இந்த முயற்சியில் நாம் பங்கு கொண்டு நமது பகுதியில் கொரானா நோய் சங்கிலித்தொடர் இல்லாமல் தடுப்போம்.
உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் கோட்டக்குப்பம் சுகாதாரத்துறை ரவி அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்: 63741 57365