April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் பொது பாதையை மறித்து காவல் நிலையம் சுவர் அமைக்கப்பட இருப்பதை கண்டித்து பொதுமக்கள் எதிர்ப்பு.

இன்று 17-04-2021, கோட்டக்குப்பம் காவல் நிலையம் சுற்றுச்சுவரை விரிவுபடுத்த கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னிலையில், காவல் நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள காந்தி ரோடு மற்றும் பழைய பட்டினம் பாதையும் இணைக்கும் குறுக்கு சாலையை மறித்து சுற்றுச்சுவர் அமைக்கப்பட உள்ளதை கண்டு கோட்டகுப்பத்தில் உள்ள கட்சி பிரமுகர்கள் மற்றும் அனைத்து பொதுமக்களும் ஒன்று கூடி அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். பல ஆண்டுகளாக பயன்படுத்தி வரும் சாலை அடைக்கக் கூடாது என்று கோட்டக்குப்பம் ஆய்வாளர் சரவணன் அவர்களிடம் ஊர் பொதுமக்கள் சார்பாக மனு அளிக்கப்பட்டது.

மேலும் இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து அனைத்து கட்சியின் சார்பாக மனு அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் இப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

குவைத் வாழ் கோட்டக்குப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! புகைப்பட தொகுப்பு.

மத்திய அரசை கண்டித்து கோட்டக்குப்பம் நகர முஸ்லிம் லீக் சார்பாக கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்!

டைம்ஸ் குழு

இன்று பிறை தென்படாததால் நாளை மறுதினம்(சனிக்கிழமை) நோன்பு பெருநாள்!

Leave a Comment