கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பில் கடந்த பொங்கல் அன்று சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக தற்போது நடைபெறும் ரமலான் மாதத்தை முன்னிட்டு சமத்துவ இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சங்கத்தலைவர் முபாரக் தலைமை தாங்க, சங்க செயலாளர் அப்துல் ரவுப் நிகழ்ச்சி ஒருங்கிணைக்க, சங்க பொருளாளர் பழனிவேல் வரவேற்புரை நிகழ்த்த சங்கத்தின் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்ச்சி சிறப்பு விருந்தினராக பேரூராட்சி மன்ற செயல் அலுவலர் ராமலிங்கம் அவர்களும், காவல் ஆய்வாளர் சரவணன் அவர்களும், ஜாமிஆ மஸ்ஜித் ஹாபிழ் முகமது புகாரி அவர்களும், முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீது அவர்களும், ஜாமிஆ மஸ்ஜித் கௌரவ முத்தவல்லி இஹ்சானுல்லாஹ் அவர்களும், முன்னாள் கவுன்சிலர் நஜீர் அவர்களும் கலந்துகொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட செயல் அலுவலர் அவர்களும், காவல் ஆய்வாளர் அவர்களும் கொரானா காலத்தில் வியாபாரிகள் பொதுமக்களிடம் எவ்வாறு இருக்கவேண்டும் என்று அறிவுரைகளை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து ஜாமிஆ மஸ்ஜித் ஹாபிழ் முகமது புகாரி அவர்கள் சமத்துவ இப்தார் நிகழ்ச்சி நடத்தப்படுவது நோக்கத்தையும் அவசியத்தையும் இந்த காலகட்டத்தின் தேவையை உணர்ந்து சிறப்புரையாற்றினார்கள்.
இதனிடையே நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவரையும் செய்தி தொடர்பாளர் அமீர் பாஷா அவர்கள் வரவேற்று பேசினார்கள். இறுதியில் சங்க துணை செயலாளர் பிலால் முஹம்மது அவர்கள் நன்றியுரை வழங்க சங்க கவுரவத் தலைவர் சாகுல் ஹமீது அவர்கள் நோன்பு திறக்கும் துவா சொல்ல நிகழ்ச்சி இனிதே முடிவுற்றது.
நிகழ்சிக்கான ஏற்பாட்டை வணிகர் சங்க நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தார்கள்.