கோட்டக்குப்பம் இஸ்லாமிய கல்வி அறக்கட்டளை(KIET) மற்றும் ஏகத்துவ முஸ்லிம் ஜமாஅத்(YMJ) சார்பாக நேற்று(10-07-2021) சனிக்கிழமை மாலை 5 மணி முதல் இரவு 8.30 வரை கொரோனா போர் வீரர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.
இந்த விழாவில் கோட்டக்குப்பம் பகுதியை சார்ந்த சுகாதார பணியாளர்கள் 100 நபர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் அவர்களின் வீட்டுக்குத் தேவையான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் ஊர்காவல் படையினருக்கு நினைவுப்பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இவ்விழாவில் கோட்டக்குப்பம் அங்கன்வாடி ஊழியர்களுக்கு, கோட்டக்குப்பம் பகுதியை சார்ந்த பொதுநல தன்னார்வலர்களும் விருதுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும், இந்த நிகழ்ச்சியில் கொரோனா பேரிடர் காலங்களில் சிறப்பாக செயல்பட்டதற்காக சிறப்பு நிலை பேரூராட்சி, கோட்டகுப்பம் காவல் நிலையம், அனைத்து மகளிர் காவல் நிலையம், கிராம நிர்வாக அலுவலர், மண்டல மருத்துவ அதிகாரி, ஆரம்ப சுகாதார நிலையம், கோட்டக்குப்பம் அங்கன்வாடி, கோட்டக்குப்பம் மின்சார அலுவலகம் போன்ற அனைத்து அலுவலகங்களுக்கும் நினைவு பரிசு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் MG முஹம்மது அலி MISC தலைவர் KIET வரவேற்பு உரை நிகழ்த்த, துவக்க உரை மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா துவக்கும் விதமாக
முனைவர். துரை. ரவிக்குமார். MA, BL, PhD விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சிறப்புரை M.A அல்தாபி அமைப்பு மாநில தலைவர் YMJ ஆகியோர் உரை நிகழ்த்தினர்.
திரு AP சரவணன்(காவல் ஆய்வாளர் கோட்டக்குப்பம்), திரு K ராமலிங்கம்(செயல் அலுவலர் கோட்டக்குப்பம்), Dr. ஜெயபிரகாஷ்(மண்டல மருத்துவ அதிகாரி),
திரு S. ரவி(சுகாதார ஆய்வாளர் கோட்டக்குப்பம்), Dr. கல்பனா தேவி(மருத்துவ அதிகாரி ஆரம்ப சுகாதார நிலையம் கோட்டக்குப்பம்), திரு P காமராஜ்(கிராம நிர்வாக அலுவலர்), திரு டெல்லி வருன், திரு ரகுநாதன்(மண்டல ஊர்க்காவல் படை தளபதி), வழக்கறிஞர் P. ராமதாஸ் (சட்ட ஆலோசகர் KIET), அப்துல் சமத் (முக்கிய பிரமுகர் மற்றும் டிரஸ்டி KIET), ஹாஜா(ஹசனா ஸ்போர்ட்ஸ் உறுப்பினர் KIET) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து, கொரோனா போராளிகளுக்கு சான்றிதழ், நினைவு பரிசுகள் வழங்கினர்…
இந்த நிகழ்ச்சியில் KIET மற்றும் YMJ நிர்வாகிகள் முஹம்மது அப்பாஸ்(மாவட்ட தலைவர் YMJ), ஜாஃபர் (Supreme store) கிளை தலைவர் YMJ கோட்டக்குப்பம், அப்பாஸ்(செயலாளர் KIET), யாசர் அராஃபத்(கிளை செயலாளர் YMJ கோட்டக்குப்பம்), அப்துல் வாஹித்(மாணவர் அணி YMJ கோட்டக்குப்பம்),
அசைன் இப்ராஹிம்(மாணவர் அணி பொறுப்பாளர் மதரசத்துள் ஹிதாயா), அபூபக்கர் சித்தீக்(தலைமை இமாம் KIET) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இவர்களுடன் பல்வேறு சங்கங்கள், மற்றும் பொதுநல அமைப்பு தலைவர்கள், ஊர் ஜமாத்தார்கள், மற்றும் தன்னார்வலர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.