நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி சார்பாக மூவர்ண தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று (ஆக. 15) நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அரபிக் கல்லூரி செயலாளர் ஹாஜி முஹமது முஸ்தபா அவர்கள் தேசியக் கொடி ஏற்றினார். இதில் செயற்குழு உறுப்பினர் ஹாஜி V. R. முஹமது இப்ராஹிம், ஹாஜி A. இஹ்சானுல்லாஹ், ஃபக்ருதீன் பாருக், பிலால் முகமது, அமீர் பாஷா, ரஹமதுல்லாஹ், அஞ்சுமன் நுஸ்ரத்துல்த இஸ்லாம் நூலக செயலாளர் லியாகத் அலி, SMJ அமீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.