26.1 C
கோட்டக்குப்பம்
December 3, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பதில் தி.மு.க கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்!

மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தின் பல இடங்களில் திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சியினர் கருப்புக்கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யவும், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வை குறைக்கக்கோரியும், விலைவாசி உயா்வு, பொருளாதார சீரழிவு, தனியாா்மயமாக்கல், வேலையில்லா திண்டாட்டம், பொதுத்துறை நிறுவனங்களை விற்பனை, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு விவகாரம் என்பன உள்ளிட்டவற்றில் மத்திய அரசைக் கண்டித்தும் தமிழகத்தில் இன்று திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் சார்பில் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தன.

அதன்படி, கோட்டக்குப்பம் பேரூராட்சியில் விழுப்புரம் மத்திய மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் திரு SS ஜெயமூர்த்தி அவர்களின் தலைமையில் அவரது வீட்டில் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துக்கொண்டு கருப்புக்கொடி ஏந்தி மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் நாளை 19-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் ரஹ்மத் பள்ளிவாசல் சார்பில் 75-வது சுதந்திர தின நிகழ்ச்சி

டைம்ஸ் குழு

கலைஞர் நினைவு தினம்: கோட்டக்குப்பம் 14-வது வார்டு திமுக சார்பில் மலர் மாலை அணிவித்து நலத்திட்ட உதவிகள் வழங்கல்

டைம்ஸ் குழு

Leave a Comment