26.1 C
கோட்டக்குப்பம்
December 3, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக மழை நிவாரண உதவி.

கோட்டக்குப்பம் வணிகர்கள் சங்கம் சார்பாக கடந்த நாட்களில் பொழிந்த கடும் மழையின் காரணமாக சுமார் 150 ஏழை குடும்பங்களுக்கு அரிசி தொகுப்பு பை இன்று வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் ராபின்சன் அவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு அரிசி வழங்கினார்கள்.

இந்த நிகழ்ச்சியில் சங்கத் தலைவர் முபாரக், செயலாளர் அப்துல் ரவூப், பொருளாளர் வேலு, துணைத்தலைவர்கள் சாகுல் அமீது, பூபாலன் துணை செயலாளர்கள், பிலால் முஹம்மத், அமைப்பாளர் முஹம்மது ரஃபி, செயற்குழு உறுப்பினர்கள் ராஜா, லதா ஸ்டில் உரிமையாளர், அஷ்ரப் அலி, நசீர், ஆதில் அப்துல் காதர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் செய்தித்தொடர்பாளர் அமீர் பாஷா நன்றி கூற நிகழ்ச்சி முடிவுற்றது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

இன்று தேர்தல் பிரச்சாரம் இறுதிநாள்: வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை சூப்பர் மெகா தடுப்பூசி முகாம்

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் சராசரி வாக்காளர் எண்ணிக்கையில் வார்டு வரையறை செய்ய வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்‌.

டைம்ஸ் குழு

Leave a Comment