ஒமைக்ரான் கொரோனா வைரஸ் தொற்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. இந்தியாவிலும் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு ஒமைக்ரான் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்திலும் 34 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால், கொரோனா தடுப்பூசி போடும் பணி தமிழகத்தில் தீவிரப்படுத்தப்பட்டு, வாரந்தோறும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதுவரை 15 மெகா கரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளன. வீடுகளுக்கு சென்றும் தடுப்பூசி போடப்படுகிறது. இந்நிலையில், 16-வது முகாம் நாளை (26-12-2021, ஞாயிறு) கோட்டக்குப்பதில் 10 இடங்களில், காலை 8 மணி முதல் தடுப்பூசி முகாம் கீழ்க்கண்ட இடங்களில் நடைபெறவுள்ளது.
- அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி, கோட்டக்குப்பம்.
- பரகத் நகர் பள்ளிவாசல், கோட்டக்குப்பம்.
- சிவன் கோயில், சின்ன கோட்டக்குப்பம்.
- அங்கன்வாடி மையம், சத்யா நகர், சின்ன கோட்டக்குப்பம்.
- அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தந்தராயன்குப்பம்.
- சல்மான் பள்ளிவாசல், பஜார் வீதி, கோட்டக்குப்பம்.
- அங்கன்வாடி பெரிய கோட்டக்குப்பம்.
- அரசு நடுநிலைப் பள்ளி, பெரிய முதலியார் சாவடி.
- ஜெயமுத்து மாரியம்மன் கோயில், சின்ன முதலியார் சாவடி.
- மதரஸா, ரகமத் நகர், கோட்டக்குப்பம்.
தடுப்பூசி செலுத்திக்கொண்டால் உயிரிழப்பில் இருந்து பாதுகாத்து கொள்ள முடியும். அதனால் காலம் தாழ்த்தாமல் தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.
ஆகவே, இதுவரை தடுப்பூசி செலுத்தாதவர்கள் இந்த முகாமினை பயன்படுத்திக்கொள்ளவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
மேலும் சந்தேகங்கள் மற்றும் விபரங்களுக்கு:
திரு. ரவி,
(Health inspector)
9486476433
சுகாதார ஆய்வாளர்.