April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் சராசரி வாக்காளர் எண்ணிக்கையில் வார்டு வரையறை செய்ய வேண்டும்: அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்‌.

கோட்டக்குப்பம்‌ நகராட்சியின்‌ புதிய வார்டு மறுவரையறை குறித்து அனைத்து கட்சி கூட்டம், நேற்று 26-12-2021, மாலை 5.00 மணியளவில்‌ கோட்டக்குப்பம்‌ நகர காங்கிரஸ்‌ கட்சியின்‌ அலுவலகத்தில்‌ காங்கிரஸ்‌ கட்சியின்‌ நகர தலைவர்‌ உ.முகமது பாருக்‌ தலைமையில்‌ மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி, இந்திய யூனியன்‌ முஸ்லீம்‌ லீக்‌, மனிதநேய மக்கள்‌ கட்சி, விடுதலை சிறுத்தைகள்‌ கட்சி, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌, தேசிய முற்போக்கு திராவிட கழகம்‌, அண்ணா திராவிட முஸ்லீம்‌ முன்னேற்ற கழகம்‌, பள்ளிவாசல்‌ ஜமாத்தார்கள்‌ மற்றும்‌ சமூக அமைப்பின்‌ நிர்வாகிகள்‌ கலந்துக்கொண்ட கூட்டம்‌ நடைபெற்றது. கூட்டத்தில்‌ கோட்டக்குப்பம்‌ நகராட்சியின்‌ புதிய வார்டு மறுவரையறையில்‌ ஏற்றுப்பட்டுள்ள குளறுபடிகளை களைந்து வாக்காளர்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ சமமாக பிரித்து மீள்மறுவரையறை செய்து இறுதி வார்டு மறுவறையறை செய்ய வலியுறுத்தி தீர்மானம்‌ நிறைவேற்றப்பட்டது.

இந்த தீர்மானத்தில்:

கோட்டக்குப்பம்‌ பேரூராட்சியாக இருந்து நகராட்சியாக தரம்‌ உயர்த்தப்பட்டுள்ளது. 18 வார்டுகளாக இருந்ததை மறுவறையறை செய்து 27 வார்டுகளாக பிரிக்கப்பட்டு மறுவறையறை அறிக்கை கடந்த 18-12-2021 அன்று கோட்டக்குப்பம்‌ நகராட்சியின்‌ ஆணையரால்‌ வெளியிடப்பட்டது . அவ்வாறு வெளியிடப்பட்டுள்ள வார்டு மறுவரையறை அறிக்கை அவசரகதியில்‌ செய்யப்பட்டுள்ளது. வார்டு மறுவரையறை செய்யப்பட்ட விதமும்‌, அதற்கான அளவுகோளும்‌ சரியானவையாக இல்லை. அதிகமான வாக்காளர்களை கொண்டுள்ள சிறுபான்மை மக்களுக்கு கூடுதல்‌ வார்டுகள்‌ ஒதுக்காமல்‌ பிரதிநிதித்துவம்‌ குறைத்து வழங்கப்பட்டிருப்பது ஜனநாயகத்திற்கு முற்றிலும்‌ எதிரானது ஆகும்‌. மேலும்‌ இந்த மறுவறையறையில்‌ பல முறைகேடுகள்‌ செய்யப்பட்டதாகவும்‌ அமைந்துள்ளது. இந்த மறுவறையறை TAMILNADU DELIMITATION ACT – 2017க்கு எதிராக உள்ளதால்‌ இதனை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியாது. எனவே, ஆணையரால்‌ வெளியிடப்பட்டுள்ள வார்டு மறுவறையறை அறிக்கையை உடனடியாக திரும்பபெற்று, வார்டு மறுவரையறையில்‌ செய்யப்பட்டுள்ள அனைத்து குளறுபடிகளையும்‌ களைந்து வாக்காளர்களின்‌ எண்ணிக்கை அடிப்படையில்‌ சமமாக வார்டுகளை பிரித்து மீள்மறுவரையறை செய்து வார்டுகளை இறுதிப்படுத்த தமிழக தேர்தல்‌ ஆணையத்தை வலியுறுத்தி தீர்மானம்‌ நிறைவேற்றப்படுகிறது.

இப்படிக்கு,

  1. இந்திய தேசிய காங்கிரஸ்‌
  2. மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி
  3. இந்திய யூனியன்‌ முஸ்லீம்‌ லீக்‌
  4. மனிதநேய மக்கள்‌ கட்சி
  5. விடுதலை சிறுத்தைகள்‌ கட்சி
  6. மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம்‌
  7. தேசிய முற்போக்கு திராவிட கழகம்‌
  8. அண்ணா திராவிட முஸ்லீம்‌ முன்னேற்ற கழகம்‌
  9. KIMS
  10. KRIP

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

அல்-மஸ்ஜிதே முபாரக் வல் மதரஸா தீனியத் மக்தப் மதரஸா 8-ம் ஆண்டு விழா

துபாய் வாழ் கோட்டகுப்பத்தினர் பெருநாள் கொண்டாட்டம்!! (புகைப்படங்கள்)

டைம்ஸ் குழு

அல்ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக்கல்லூரி மற்றும் பெண்கள் அரபிக் கல்லூரி நிதியுதவி வேண்டுகோள்

Leave a Comment