April 21, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு மறுவரையரையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை களைய கோரி விழுப்புரம் ஆட்சியரிடம் மனு.

கோட்டக்குப்பம் நகராட்சியின் வார்டு மறுவரையரையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளை களைய கோரி நேற்று(05/01/2022), விழுப்புரம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். இது சம்மதமாக வார்டு மறுவரையரையில் ஏற்பட்டுள்ள ஆட்சேபனைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவைகளுக்கு உரிய முறையில் மாற்றம் செய்வதாக மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார்.

இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் N. சுப்ரமணியன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் S. முத்துக்குமரன், நகர செயலாளர் J. முகமது அனஸ் மற்றும் அண்ணா திராவிட முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் முகமது யூனுஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும், இந்நிகழ்வில் கோட்டகுப்பம் நகராட்சி ஆணையர் திருமதி.பானுமதி மற்றும் முன்னாள் பேரூராட்சி செயல் அலுவலர் திரு. ராமலிங்கம் உடன் இருந்தது, குறிப்பிடத்தக்கது.

அதேபோல், கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையரிடம் அனைத்து கட்சி சார்பாக மனு 04/01/2022 அன்று அளிக்கப்பட்டது. இதில், இந்திய தேசிய காங்கிரஸ், மார்க்சிஸ்ட்‌ கம்யூனிஸ்ட்‌ கட்சி, இந்திய யூனியன்‌ முஸ்லீம்‌ லீக்‌, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மனிதநேய மக்கள்‌ கட்சி, விடுதலை சிறுத்தைகள்‌ கட்சி, தேசிய முற்போக்கு திராவிட கழகம்‌, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்‌ கழகம்‌, அண்ணா திராவிட முஸ்லீம்‌ முன்னேற்ற கழகம்‌ மற்றும்‌ சமூக அமைப்பின்‌ நிர்வாகிகள்‌ உடனிருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் வணிக வளாகம் ~ 3 திறப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

டைம்ஸ் குழு

ஹஜ்ஜூப் பெருநாள் தொழுகையில் பெரிய தெரு மஹமூதியா மதரஸா வளர்ச்சிக்கு வசூல்..

Leave a Comment