பின்தங்கிய பகுதிகளில் வசிக்கும் சிறுவர், சிறுமிகள் குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடுக்கவும், அவர்கள் தவறாக வழிநடத்தப்படுவதை தடுக்கவும் தமிழ்நாடு காவல் துறை சார்பில் இளம் சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றம் அமைக்கப்பட்டுள்ளது. காவல் நிலையங்களின் கட்டுப்பாட்டில் செயல்படும் இந்த அமைப்பில் அந்தப் பகுதியைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டு, தற்காப்பு கலை, மாலை நேர படிப்பு போன்றவை கற்றுத்தரப்படுகிறது.
அதன்படி, கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அமைந்துள்ள சிறுவர் மற்றும் சிறுமியர் மன்றத்தை இன்று (07/01/2022), கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் ஆய்வை மேற்கொண்டு மாணவர்களிடையே உரையாடினார்.
மேலும் ஆய்வின் பொழுது கோட்டக்குப்பம் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் திரு. ஆனந்த், பள்ளி உடற்கல்வி ஆசிரியர் திருமதி. மஞ்சுளா, சிறுவர் சிறுமியர் மன்ற ஆசிரியர் திரு. அ.சாரதி உடனிருந்தனர்.