கோட்டக்குப்பதில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு காவல்துறை சார்பில் அபராதம் விதிக்கப்பட்டது. ஒமைக்ரான் தொற்று பரவலை தடுக்கும் விதமாக காவல் துறை சார்பில் பல்வேறு விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டன.
கோட்டக்குப்பம் காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில், கடந்த சில தினங்களாக காவல் ஆய்வாளர் திரு. ராபின்சன் அவர்கள் தலைமையில் முகக்கவசம் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, முகக்கவசம் அணியாதவர்களுக்கு இலவசமாக முகக்கவசங்கள் வழங்கி வந்தார். மேலும், விதிகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் மற்றும் அபராதம் விதிக்கப்படும் என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், இன்று(08/01/2022) கோட்டக்குப்பதில் காவல் ஆய்வாளர் தலைமையில், முகக்கசவம் அணியாத பொது மக்கள் மற்றும் வியாபாரிகள் 6 பேருக்கு தலா ரூ.200 வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுக்கு காவல் ஆய்வாளர் அறிவுரை வழங்கி அனுப்பி வைத்தார்.
இனிவரும் காலங்களில் பொது மக்கள், வியாபாரிகள், கடை ஊழியர்கள் அனைவரும் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது மற்றும் கைகளை அடிக்கடி கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது போன்ற ‘கோவிட் கட்டுப்பாட்டு நெறிமுறைகள்‘ கண்டிப்பாக கடைபிடிக்குமாறு கோட்டக்குப்பம் காவல் ஆய்வாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.