29.2 C
கோட்டக்குப்பம்
November 22, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் நகராட்சி வார்டுகள் இட ஒதுக்கீடு: யாருக்கு எத்தனை இடங்கள்.. வெளியான அரசாணை.

நகர்ப்புற ஊரக உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதில் கோட்டக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி பொது பிரிவினருக்கு ( GENERAL) ஒதுக்கப்பட்டுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில் வார்டுகள் இட ஒதுக்கீடு செய்யப்பட்டு தமிழக அரசு அரசாணையை வெளியிட்டிருக்கிறது.

கோட்டக்குப்பம் நகராட்சியில் மொத்தம் 27 வார்டுகள் உள்ளன. அதில் 12 வார்டுகள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வார்டுகள் வருமாறு:-

வார்டு எண்: 1, 4, 5, 8, 9, 14, 15, 16, 17, 22, 23, 25.

12 வார்டுகள் பெண்கள் பொது பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த வார்டுகள் விவரம் வருமாறு:-

வார்டு எண்: 2, 3, 7, 12, 13, 18, 19, 20, 21, 24, 26, 27

மேலும், ஆதிதிராவிடர் பொது பிரிவினருக்கு வார்டு எண்: 6 மற்றும் ஆதிதிராவிடர் பெண்களுக்கு வார்டு எண்: 10, 11 ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் சிறுபான்மையினர் அதிகமாக வாக்காளர்களை கொண்ட 7, 12, 18, 19, 20, 21, 26, 27 ஆகிய எட்டு வார்டுகளை பெண்கள் வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இருபத்தி ஏழு வார்டுகளில் 50 சதவிகித பெண்களுக்கு என்று ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் சிறுபான்மையர் பகுதி மற்றும் மற்ற சமூகத்தினர் பகுதி என்று இரு பகுதி வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில்தான் பெண் வார்டாக பிரிக்க வேண்டும். அப்படி பார்க்கையில், இப்போது இருக்கக்கூடிய வாக்காளர் எண்ணிக்கையில் சிறுபான்மையர் அதிகம் வாக்காளர்கள் உள்ள பகுதி 5 முதல் 6 வார்டுகளே பெண் வாக்காளர்களாக அறிவிக்க வேண்டும். சிறுபான்மை வாக்காளர்கள் வசிக்கக்கூடிய 8 வார்டுகளை பெண்கள் வார்டாக அறிவித்து இருப்பது, வேறு பகுதிக்கு 4 வார்டுகளை மட்டுமே பெண் வார்டாக அறிவித்திருப்பது ஒரு நடுநிலையான நடவடிக்கையாக கருத முடியாது.

அனைத்து மக்களின் எண்ணங்களை அறிந்து அதற்குத் தகுந்தாற்போல் வார்டுகளை அமைத்துக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை என்பதை பொதுமக்கள் எதிர்பார்ப்பு.

(வார்டு வரையறை யில்தான் சமநிலை கடை பிடிக்க வில்லை என்றாலும் பெண் வார்டு அறிவிப்பதிலும் சமநிலை கடை பிடிக்க வில்லை என்ற பொதுமக்களின் மனக் குமுறல் ஊர் முழுவதும் ஒலிக்கிறது.)

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோரோணா நோய் தடுப்பு குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆய்வு செய்தார்.

பெருநாள் தொழுகையை நிறைவேற்ற ஈத்கா மைதானம் நோக்கி ஜமாத்தார்கள்..

கொரோனா தடுப்பூசி முகாம் இந்த வாரம் இல்லை.

டைம்ஸ் குழு

Leave a Comment