கோட்டக்குப்பம் பரகத் நகர், அல் மஸ்ஜிதுல் முபாரக் வல்மதரஸா நிர்வாகத்தின் சார்பாக 73-வது குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை பள்ளிவாசல் நிர்வாகிகள் செய்திருந்தார்கள்.
நிகழ்ச்சியில் பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முஹம்மது அவர்கள் தலைமை ஏற்று நடத்தினார்கள்.
பள்ளியின் இமாம் மௌலவி அக்பர் சாதிக் ஸலாஹி அவர்கள் கிராஅத் ஓதி தொடங்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் குடியரசு தின சிறப்பு பற்றி முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீது, ஜாமிஆ மஸ்ஜித் முன்னாள் முத்தவல்லிகள் ஹாஜி இஹ்சானுல்லாஹ், ஹாஜி பகுருதீன், ஹாஜி முகமது பாருக், இன்னால் முத்தவல்லி முஹம்மது பாருக், ரப்பானியா அரபிக்கல்லூரி மற்றும் புஸ்தானியா பள்ளிவாசல் செயலாளர் ஹாஜி முஹம்மது இபுராஹிம், அஞ்சுமன் செயலாளர் கலீமுல்லாஹ், முன்னாள் கவுன்சிலர் நஜீர், ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர் அமீர் பாஷா மற்றும் பலர் குடியரசு தின சிறப்பு பற்றி சிற்றுரை ஆற்றினார்கள். இறுதியில் பள்ளியின் செயலாளர் அப்துல் நாசர் நன்றி கூற துவாவுடன் சிறப்புடன் நிறைவுற்றது.
நிகழ்ச்சியில் பள்ளிவாசல் துணை முத்தவல்லி முஹம்மது பாரூக், பொருளாளர் முஹம்மது இபுராஹிம், மற்றும் நிர்வாக உறுப்பினர்கள் ராஜா, அப்துல் ஜப்பார், ஹாஜா கமால், ஹாஜாமைதீன், அப்துல் குத்தூஸ், ஜாஃபர் அலி, ஜாகிர் உசேன் ஆகியோருடன் மஹல்லா வாசிகள் மற்றும் அனைத்து அமைப்பின் நிர்வாகிகள் பெருந்திரளாக கலந்து கொண்டார்கள்.