ஹிஜாப் அணிவது இஸ்லாமிய மதத்தில் அடிப்படை அவசியம் கிடையாது என்று கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பை கண்டித்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் கிளையின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் விழுப்புரம் மாவட்ட தலைவர் சகோதரர் இப்ராஹிம் அவர்கள் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தனர், கண்டன உரை மாநில பொருளாளர் காஞ்சி இப்ராஹிம் அவர்கள் நிகழ்த்தினார்கள்.
இதில் கிளை நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர் மற்றும் இறுதியாக கிளை செயலாளர் அன்சாரி அவர்கள் நன்றி உரையாற்றினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் 500-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.