நமதூர் முக்கிய அடையாளங்களில் ஒன்றான கோட்டக்குப்பம் அரசு முஸ்லிம் தொடக்கப் பள்ளியும் ஒன்று. இந்த பள்ளியானது நூற்றாண்டை கடந்து பழமை வாய்ந்த பள்ளி. கடந்த சில ஆண்டுகளாக, இந்த பள்ளியில் பராமரிப்பு பணி இன்றி மற்றும் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டு இருந்தது.
இதனை சரி செய்யும் வகையில், கோட்டக்குப்பம் நகராட்சியின் 18-வது வார்டு கவுன்சிலர் ஃபர்கத் சுல்தானா, தனது முதல் வேலையாய் பள்ளிக்கூடத்தை சரி செய்யும் நோக்கத்தில் களம் இறங்கியுள்ளார். முதலில் பள்ளியில் முக தோற்றத்தை மாற்றி அமைக்கும் நோக்கில் பள்ளியின் முகத்தோற்றம் முழுவதும் வண்ணமயமாக வண்ணம் பூசி அழகு படுத்தியுள்ளார். இதன் மூலம் ஒரு நல்ல பள்ளியில் படிக்கிறோம் என்ற எண்ணத்தை மாணவர்களிடம் உருவாகவே இந்த முயற்சி என கூறியுள்ளனர்.
மேலும், இங்கு படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்வி தரத்தை அதிகப்படுத்தி, டிஜிட்டல் கல்வியின் மூலம் தரமான கல்வியை அனைத்து மாணவர்களுக்கும் பயிற்றுவிக்கவும், மாணவர்களின் சேர்க்கையை அதிக்கப்படுத்த கோட்டக்குப்பம் பகுதியிலே ஒரு ஆசிரியர் தேர்ந்தெடுத்த பணி அமர்த்தவும், மாணவர்களுக்கு விளையாட்டு சாதனங்களை அதிகப்படுத்தவும், பள்ளியின் இயற்கை சூழலை மேம்படுத்தவும் முயற்சியை மேற்கொண்டுள்ளார்.
மேலும், மேற்சொன்ன அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ள பலரிடம் உதவி கேட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு சிறந்த பள்ளியை உருவாக்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த புதிய முயற்சிக்கு பொதுமக்களிடம் பெரும் பாராட்டும், வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
இதேபோல், நகர் மன்ற உறுப்பினர்கள் அவர்களின் பகுதியிலுள்ள அங்கன்வாடி மையம், அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு பள்ளிகளில் தரத்தை உயர்த்த செயல்பட வேண்டும் என சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.