April 20, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் சார்பில் சல்மான் பள்ளிவாசலுக்கு ஒலி அமைப்பு சாதனங்கள் வழங்கப்பட்டது.

கோட்டக்குப்பம் பஜார் வீதியில் அமைந்துள்ள சல்மான் பள்ளிவாசலுக்கு ஆம்ப்ளிபயர், ஸ்பீக்கர் மற்றும் மைக் பழுதடைந்து விட்டதால், புதிதாக வாங்கி தருமாறு கோட்டக்குப்பம் குவைத் ஜமாத்திற்கு விண்ணப்பம் தெரிவித்து, கடந்த 11-04-2022 அன்று கோரிக்கை கடிதம் பெறப்பட்டது.

கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் நிர்வாக குழுவில் ஆலோசிக்கப்பட்டு ஒரு கணிசமான தொகை, குவைத் ஜமாத் நிதியிலிருந்து தருவதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். மேலும், பாக்கி தொகையை, குவைத் சுப்ரீம் டிராவல்ஸ் & கார்கோ நிறுவனர் ஜனாப் A.M. அபூபக்கர் சித்தீக் அவர்கள் பொறுப்பேற்று கொண்டார்கள்.

(05/05/2022) வியாழக்கிழமை அன்று அஸர் தொழுகைக்கு பிறகு கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் உள்ளூர் பிரதிநிதிகள் மற்றும் தாயகத்தில் இருக்கும் ஜமாத் நிர்வாகிகள் ஆகியோர் முன்னிலையில் சல்மான் பள்ளிவாசல் கோரிக்கை பூர்த்தி செய்ய அவர்களின் விருப்பத்திற்கு ஏற்றவாறு ரூபாய் 38,242 மதிப்புள்ள ஆம்ப்ளிபயர், ஸ்பீக்கர் மற்றும் மைக் ஆகிய சாதனங்கள் சல்மான் மஸ்ஜித் நிர்வாகிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.

சுப்ரீம் டிராவல்ஸ் & கார்கோ நிறுவனர் ஜனாப் A.M. அபூபக்கர் சித்தீக் அவர்களுக்கும் மற்றும் அவர்களின் நன்கொடையை பெற்றுத்தந்த கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் நிர்வாகி S.A. சையத் சாதிக் அவர்களுக்கு ஜமாத் சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் நகராட்சி அலுவலகத்தில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா கூட்டு குர்பானி 2021 அறிவிப்பு…

டைம்ஸ் குழு

ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரி 27-வது பட்டமளிப்பு விழா

Leave a Comment