22.9 C
கோட்டக்குப்பம்
November 22, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

புதுப்பிக்கப்பட்ட கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹால்.

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹால் 1983-ஆம் ஆண்டு கட்டப்பட்டு தற்போது 39 ஆண்டுகள் கடந்து சிறப்பாக இயங்கி வருகிறது. கோட்டக்குப்பத்தில் முஸ்லிம் திருமணங்கள் பெரும்பாலானவை இங்கு நடைபெறுவது வழக்கம். மேலும் திருமணம் மட்டுமின்றி பல விசேஷங்களுக்கு, நமதூர் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

கோட்டக்குப்பம் ஷாதி மஹாலில் தரை தளம் மட்டும் இயங்கி வந்த நிலையில், மக்களின் தேவைகளை அறிந்து கடந்த 2015-ஆம் ஆண்டு ஜாமிஆ மஸ்ஜித் மண்டபத்தின் மேல் கூரை அமைக்கலாம் என திட்டமிட்டு, 2016-ஆம் ஆண்டு மேற்கூரை அமைக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால், தரைத்தளம் மற்றும் முதல் தளம் தங்களின் விசேஷங்களுக்கு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

மேலும், கடந்த சில வருடங்களாக அங்கு பதிக்கப்பட்டிருந்த தரை சலவைக்கல் பழுதடைந்து காணப்பட்டு வந்தது. இதனை சரி செய்யும் வகையில், கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகம் கடந்த மாதம் பராமரிப்பு பணி மேற்கொண்டது. இதில் மண்டபத்தின் உள் பகுதியில் உள்ள பழைய சலவைக்கல் முழுவதும் அகற்றப்பட்டு, புதிதாக டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது. மேலும் மேடை(ஸ்டேஜ்), நடை பகுதி மற்றும் பாத்ரூம் பகுதிகளிலும் புதிய டைல்ஸ் பதிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக இருந்த பழைய டியூப் லைட்டுகளை முழுவதும் அகற்றப்பட்டு விட்டு, புதிய LED டியூப் லைட்டுகள் மற்றும் புதிய 18 மின்விசிறிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், உட்புற மண்டபம் முன் இருந்தது போல் இல்லாமல், தற்பொழுது மிகவும் வெளிச்சமாகவும், அழகாகவும் காட்சியளிக்கின்றது.

தற்போது அனைத்து வேலைகளும் முடிக்கப்பட்ட நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை(08/05/2022) ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு யாசீன் ஓதி துஆ செய்யப்பட்டது. இந்நிகழ்வில் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் ஜாமிஆ மஸ்ஜித் நிர்வாகிகள், உறுப்பினர்கள், ஊர் ஜமாத்தார்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் நாளை 22-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

ஜமியத் நகரில் புதுவை பல்கலைக்கழக ஊழியர் வீட்டில் நகை கொள்ளை.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பம் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியின் கூட்டு குர்பானி…

Leave a Comment