கோட்டக்குப்பம் குவைத் ஜமாத் மற்றும் அஞ்சுமன் நூலகம் இணைந்து நடத்தும், “கல்வி வழிகாட்டி 2022“, இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு ஜாமிஆ மஸ்ஜித் ஷாதி மஹாலில் நடைபெறவுள்ளது.
நமதூர் மற்றும் சுற்று வட்டார பகுதி மாணவர்கள் இன்றைய வாய்ப்பை பயன்படுத்தி, கல்வியாளர்கள் கருத்தை கேட்டு, எதிர்கால படிப்பை தேர்ந்தெடுக்க, மாணவ – மாணவியர் முன்வர வேண்டும். பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், அடுத்து எந்தவிதமான உயர் கல்வியை தேர்வு செய்வது போன்ற பல்வேறு கேள்விகள் மாணவர்களிடையே இருக்கும். இவர்களின் கேள்விகளுக்குத் தீர்வு காணும் வகையில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்ச்சிக்கு சிறந்த கல்வியாளர்கள் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்ட உள்ளனர். மேலும் இன்று நடைபெறும் “கல்வி வழிகாட்டி 2022” நிகழ்வில் பொது மேடையில் வழங்கப்படும் வழிகாட்டுதல்களுடன், ஒவ்வொரு மாணவ மாணவியரின் தனிப்பட்ட தேவைகளுக்கேற்ப – துறை சார்ந்து வெற்றிகரமாகத் திகழும் உள்ளூர் மேனாள் மாணவர்கள் நேரடி கள அனுபவங்களையும் பகிர உள்ளனர்.
ஆகவே, இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி மாணவர்கள் தங்களின் பெற்றோர்களுடன் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.