28.2 C
கோட்டக்குப்பம்
November 24, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

தந்திராயன்குப்பம் & ஆரோவில் கடற்கரையில் கடல் நீர் உள்வாங்கியது: மீனவர்கள் அச்சம்

கோட்டக்குப்பம் அடுத்த ஆரோவில் கடற்கரையில் கடல் திடீரென உள்வாங்கியதால் மீனவர்கள் படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றனர். விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அடுத்த ஆரோவில் கடற்கரையில் தினமும் நுாற்றுக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர்.

நேற்று மாலை ஆரோவில் கடற்கரை மற்றும் தந்திராயன்குப்பம் கடற்கரையில் கடல் நீர் திடீரென 100 மீட்டர் உள்வாங்கியது.அதிர்ச்சியடைந்த மீனவர்கள் தங்களது படகுகளை பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்றனர்.இதனையறிந்த போலீசார், சுற்றுலா பயணிகளுக்கு கடலில் குளிக்க தடை விதித்தனர். இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். பருவநிலை மாற்றம் எதுவும் நிகழாமல் இருக்கும் காலத்தில் இப்படி திடீரென கடல் நீர் உள்வாங்கியதால் மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் மிஸ்வாக் சார்பில் 450 பயனாளிகளுக்கு 15 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வினியோகம்.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பத்தில் நேற்று திடீர் தீ விபத்து: அடிக்கடி நிகழும் தீ விபத்தால் மக்கள் அச்சம்

டைம்ஸ் குழு

ஆஷுரா தின சிறப்பு சொற்பொழிவு மற்றும் நோன்பு நோற்க ஏற்பாடு..

Leave a Comment