நாட்டின் 75-வது சுதந்திர தின நிறைவு நிகழ்ச்சியும், 76-ஆம் ஆண்டு தொடக்க நிகழ்சியும் கோட்டக்குப்பம் பரகத் நகர் அல் மஸ்ஜிதுல் முபாரக் வல் மதரஸா நிர்வாகத்தின் சார்பாக சிறப்பாக இன்று நடைபெற்றது.
நிகழ்ச்சியில் பள்ளிவாசல் முத்தவல்லி பிலால் முஹம்மது அவர்கள் தலைமையேற்று நடத்த பள்ளியின் இமாம் அக்பர் சலாஹி அவர்கள் கிராஅத் ஓதி துவங்கி வைத்தார்கள்.
நிகழ்ச்சியில் முன்னாள் பேரூராட்சி மன்ற தலைவர் அப்துல் ஹமீது, முன்னாள் ஜாமிஆ மஸ்ஜித் முத்தவல்லிகள் இஹ்சானுல்லாஹ், ஃபக்ருதீன் பாருக் ஜமாலி, முஹம்மது பாரூக் இன்னாள் முத்தவல்லி முகமது பாரூக், புஸ்தானியா பள்ளி முன்னாள் முத்தவல்லி அப்துல் ஹக்கீம், ஜாமிஆ மஸ்ஜித் துணை முத்தவல்லி அப்துல் ரவூப், துணை செயலாளர் பசீர் அஹமது, முன்னாள் கவுன்சிலர் நஷீர், புஸ்தானியா பள்ளிவாசல் செயலாளர் முஹம்மது இப்ராஹிம், ஜாமிஆ மஸ்ஜித் உறுப்பினர் அமீர் பாஷா, 18-வது வார்டு கவுன்சிலர் அனஸ் மற்றும் பலர் சுதந்திர தின வாழ்த்துச் செய்திகளை மக்களுக்கு தெரிவித்தார்கள்.
நிகழ்ச்சியில் பரகத் நகர் பள்ளிவாசல் செயலாளர் அப்துல் நாசர், துணை முத்தவல்லி முகமது பாருக், பொருளாளர் முஹம்மது இபுராஹிம், துணை செயலாளர் முஹம்மது ஷரிப் மதரஸா பொறுப்பாளர் முஹம்மது ஷரீஃப் மற்றும் நிர்வாகக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.
நிகழ்ச்சியில் மஹல்லா வாசிகள், ரப்பானியா மதரஸா மாணவர்கள், பரகத் நகர் மதரஸா மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டார்கள்.