Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மக்கள் பயன்பெறும் வகையில் திருச்சிற்றம்பலம் துணை மின் நிலையத்தில் கூடுதலாக ஒரு மின் மாற்றி அமைப்பு.

விழுப்புரம்‌ மின்பகிர்மான வட்டத்தில்‌ உள்ள கோட்டக்குப்பம், திருச்சிற்றம்பலம்‌, பொம்மையார்பாளையம்‌, நெசல்‌, கடப்பேரிக்குப்பம்,‌ ஆரோலில் மற்றும்‌ அதனை சுற்றியுள்ள கிராமங்களில்‌ நிலவி வரும்‌ குறைந்த மின்‌ அழுத்தத்தை நிவர்த்தி செய்யவும், ‌ஏற்கனவே திருச்சிற்றம்பலம்‌ கிராமத்தில் இயங்கிவரும்‌ 110/22 kv துணை மின்‌ நிலையத்தில்‌ ரூபாய் 2.3312 கோடி செலவில் மேலும்‌ கூடூதலாக ஒரு 1×16 MVA திறன்‌ மின்‌ மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

இத் துணை மின்‌ நிலையத்தில்‌ மின்மாற்றி திறன்‌ உயர்த்தப்பட்டபின்‌ குறைந்த மின்‌ உழுத்தத்திலிருந்து 2545 விவசாய மின்‌ இணைப்புகள்‌, 758 சிறிய தொழிற்சாலைகள் மற்றும் ‌40441-க்கம்‌ மேற்பட்ட வீடு, வனிக நுகர்வோர்களும் மற்றும்‌ 2000 குடிசை வீடுககும்‌ நேரடியாக பயன்பெறுவர்கள்‌.

இந்த மின் மாற்றி அமைக்கப்பட்டு, இன்று மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில் வானூர்‌ சட்டமன்ற உறுப்பினர்‌ சக்கரபாணி, சேர்மன்‌ பிகேடி உஷா, கோட்டக்குப்பம் சேர்மன்‌ எஸ்.எஸ். ஜெயமூர்த்தி, திருச்சிற்றம்பலம்‌ ஊராட்சி மன்றத்‌ தலைவர்‌ வெங்கடேசன்‌, ஆகாசம்பட்டு தலைவர்‌ தம்புசாமி குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்கள்‌.

இந்நிகழ்ச்சியில்‌ ஊர்‌ முக்கிய பிரமுகர்கள்‌ மற்றும்‌ பொதுமக்கள்‌ பலர்‌ கலந்து கொண்டார்கள்‌. இந்த மின்‌ மாற்றியால்‌ வானூர்‌ பகுதியைச்‌ சுற்றியுளள 28 கிராமங்கள்‌ பயன்பெறும்‌ என்பது குறிப்பிடத்தக்கது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

பெருநாள் இரவில்(இன்று) ஜாமிஆ மஸ்ஜிதில் சிறப்பு அமல்கள்..

கோட்டக்குப்பத்தில் நாளை முதல் மாலை 4 மணிக்கெல்லாம் கடைகளை அடைக்க வேண்டும் என உத்தரவு.

பர்கத் நகர் மெயின் ரோட்டில் சேதமடைந்த மூன்று கழிவுநீர் பாதைகளை சரி செய்த கவுன்சிலர்.

டைம்ஸ் குழு

Leave a Comment