கோட்டக்குப்பத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பல மணி நேரங்கள் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இது சம்பந்தமாக, மனித நேய மக்கள் கட்சி சார்பில் நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில் உதவி செயற் பொறியாலரிடம் நேரடியாக மனு வழங்கப்பட்டது.
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது, “கோட்டக்குப்பம் நகராட்சியில் நாள்தோறும் சுமார் 4 முறைக்கும் மேலாக மின்தடை ஏற்படுகிறது. காலை வேளையில் ஏற்படும் மின் தடையால் பள்ளி மாணவர்கள் மற்றும் வேலைக்கு செல்லும் பெரியோர்கள் மிகவும் அவதிக்குள்ளாவதோடு மட்டுமல்லாமல், நகராட்சியின் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் தடைபடுவதால் பொதுமக்கள் அனைவரும் பெறும் சிரமத்திலும், மன உலைச்சலிலும் காலை நேரத்தை கடக்கிறார்கள். காரணம் கேட்டு தங்களை தொடர்புகொண்டால் பிரச்சனையை சரி செய்து விட்டோம் வந்துவிடும் என்று கூறுகிறீர்கள். ஆனால், மீண்டும் சில மணித்துளிகளில் மின் தடை ஏற்படுகிறது. இது முன்பு கூறியதுபோல் நாலொன்றுக்கு 4 முதல் 5 முறை மின் தடை ஏற்படுகிறது. நாங்கள் விசாரித்ததில் தமிழகத்தின் வேறு பகுதிகளில் இவ்வாளவு அதிக மின்தடையில்லை. ஏன் நமது நகராட்சிப் பகுதியில் மட்டும் இவ்வாறு அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது? அதற்கான காரணம் என்ன என்று விளக்கவும். மேலும், மாதம் ஒருமுறை பராமரிப்பிற்காக ஒருநாள் மின்சாரத்தை தவறாமல் நிறுத்துகிறீர்கள். இந்த நாட்களில் மின்மாற்றிகளையும், பழுதடைந்துள்ள பழைய மின் கடத்திகளையும் முறையாக பராமரிக்கின்றீர்களா? என்று எங்களுக்கு ஐயமாக உள்ளது. விளக்கவும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில், மாவட்ட தலைவர் அஸ்கர் அலி, நகர செயலாளர் ஜரீத், நகர பொருளாலர் முஹம்மது யூசுப் (ஃபைசல்) மற்றும் உறுப்பினர்கள் அமீர்ஜான் (ம) ரியாஸ்தீன் உடன் இருந்தனர்.
மேலும், பத்து நாட்களுக்குள் மின் வினியோகம் சரி செய்ய வேண்டி வலியுறுத்தப்பட்டது.