வங்கக்கடலில் வருகிற நவம்பர் 16-ஆம் தேதி மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்ததையடுத்து தமிழகத்தில் கடந்த ஓரிரு தினங்களாக கனமழை பெய்து வருகிறது. வருகிற நவம்பர் 14 ஆம் தேதி வரை பரவலாக மழை இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கக் கடலில் வருகிற 16 ஆம் தேதி மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி தென்கிழக்கு வங்கக்கடலில் அந்தமான் அருகே உருவாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது தமிழகத்தில் நவம்பர் 14 ஆம் தேதிக்குப் பிறகு மழை படிப்படியாக குறையும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.