April 20, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம் இன்றும்(12/11/22022), நாளையும்(13/11/22022) கோட்டக்குப்பத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடிகளிலும் நடைபெறுகிறது.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் இவற்றுடன் வாக்காளர் பட்டியலுடன் ஆதார் இணைப்புக்கான படிவங்களையும் பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களுடன் வழங்கலாம்.

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவ.9-ம் தேதி தொடங்கியுள்ளது. வரும் டிச.8-ம் தேதி வரை ஒரு மாதம் வரை இப்பணி நடைபெறுகிறது.

இந்த முகாமில் நேரடியாக படிவங்களை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். வேலை நாட்களில் வாக்குச்சாவடி நிலை அலுவலர், வாக்காளர் சேர்ப்புக்கான அலுவலர்களிடம் நேரடியாக இப்பணியை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜித் முப்பெரும் விழா நிகழ்வுகளை உடனுக்குடன் நமது இணையதளத்தில் காணலாம்

விவசாயிகளுக்கு ஆதரவாக இன்று கோட்டக்குப்பத்தில் முழு அடைப்பு.

கோட்டக்குப்பம் அருகே தூண்டில் வளைவு அமைக்கக் கோரி சாலை மறியல்

டைம்ஸ் குழு

Leave a Comment