கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட பெரிய முதலியார் சாவடி கிராமத்தில் உள்ள இளைஞர்கள் சார்பாக முதல் துளிர் சொசைட்டியின் தொடக்க விழா ஸ்ரீ. ஐயனாரப்பன் கோவிலில் நேற்று (13.11.2022) காலை 7 மணி அளவில் உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் முன்னிலையில் தொடங்கப்பட்டது.
விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை திரு. இர. கண்ணதாசன் பாடினார். அதனைத் தொடர்ந்து முதல் துளிர் தலைவர் திரு. ஏ. நாராயணன் அவர்கள் விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்றுச் சிறப்பு விருந்தினர்களுக்குச் சிறப்பு செய்தார். அதனைத் தொடர்ந்து மரக்கன்று நடுதலின் அவசியத்தை உறுப்பினர்களுக்கு விழிப்புணர்வாக திரு. இ. மனோ அவர்கள் ஏற்படுத்தினார்.
சிறப்பு அழைப்பாளர்கள் திரு. விஷ்ணு அவர்கள் மற்றும் திரு.விஜயகுமார் அவர்கள் ஆகிய இருவரும் முதல் துளிர் சொசைட்டியின் பெயர் பொறித்த பலகையைத் திறந்து வைத்தும் முதல் மரக்கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்கள்.
கெளரவத் தலைவர் திரு. த. சபரிகிரி அவர்கள் நன்றி கூறினார். முதல் துளிர் சொசைட்டியின் துணைத் தலைவர். வீ. வெங்கடேஷ், பொதுச் செயலாளர் இர. விஜய், செயற்குழு உறுப்பினர்கள் சே. சூரியா, மு. சூரியா மற்றும் பொதுக் குழு உறுப்பினர்கள் திருமதி. ம. நிரஞ்சனாதேவி , திரு.M. சஞ்சீவி, திரு.S. இராம்குமார், திரு. G.திருவரசன், ஆகியோர்கள் விழாவில் பங்கேற்றார்கள்.
விழாவின் நிறைவாக மரக்கன்று நடுதல் மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு சார்ந்த உறுதிமொழி எடுக்கப்பட்டது.