கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு உள்பட்ட ஓட்டல் லாட்ஜ் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்துக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமை தாங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக கோட்டக்குப்பம் துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) வகிக்கும் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது:- கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள ஓட்டல் லாட்ஜ் மற்றும் ரிசார்டுகளில் தங்கும் சுற்றுலா பயணிகளின் விவரங்களை உரிமையாளர்கள் வாடிக்கையாளரின் இந்திய தேசிய அடையாள அட்டையுடன் பொருத்தி அடையாளம் காண வேண்டும்.
சரியான அடையாள அட்டை சமர்ப்பிக்காத போலி நபர்கள் குறித்து உடனடியாக கோட்டகுப்பம் போலீஸ் நிலையத்திற்கு சம்பந்தப்பட்ட உரிமையாளர்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். தங்கும் விடுதியில் சுற்றுலாப் பயணிகள் என்று தங்கும் நபர் காலம் 1-ல் கண்ட விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் அல்லது அதனை உரிமையாளர்கள் தெரிந்து மறைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஓட்டல் மற்றும் லாட்ஜூகளை சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்துக் கொள்ள வேண்டும். தங்குமிடத்தில் கஞ்சா, போதை ஊசி வஸ்துகள் பயன்படுத்தியதற்கு அனுமதி இல்லை. அதனை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தினால் உரிமை யாளர்களே அதற்கு பொறுப்பு.
உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விடுதிகளில் பணியாற்றும் நிறுவனத்தில் ஊழியர்கள் வாடிக்கையாளர்களுக்கு எந்தவிதமான மது வஸ்துகளை வாங்கி தருவதாக தெரிய வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் இவ்வாறு பேசினார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் கோட்டக்குப்பம் போலீஸ் நிலைய அதிகாரிகள் மற்றும் போலீசார், ஓட்டல், லாட்ஜ் மற்றும் ரிசார்ட் உரிமையாளர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.