30.2 C
கோட்டக்குப்பம்
November 21, 2024
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

மாண்டஸ் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து கோட்டக்குப்பம் நகர்மன்ற தலைவர் & அதிகாரிகள் ஆய்வு.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தென்மேற்கு வங்க கடலில் இருந்து மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து இது வடமேற்கு திசையில் நகர்ந்து தமிழகம் புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையில், புதுச்சேரி-ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை நள்ளிரவு கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், புயல் காரணமாக தமிழகம் மற்றும் புதுவைக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோட்டக்குப்பம் நகராட்சிக்கு உட்பட்ட கடலோர பகுதியில் புயல் முன்னொச்சரிக்கை நடவடிக்கை பேரிடர் கால பல்நோக்கு பாதுகாப்பு மையங்களை கோட்டக்குப்பம் நகராட்சி நகர மன்ற தலைவர் எஸ்.எஸ். ஜெயமூர்த்தி, வானூர் வட்டாசியர் திரு. கோவர்த்தனன், கோட்டக்குப்பம் நகராட்சி ஆணையர் திரு. மங்கையர்கரசன், கிராம நிர்வாக அலுவலர் அமலநாதன் ஆகியோர் பார்வையிட்டனர்.

கோட்டக்குப்பம் நகராட்சி உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவசர உதவிக்கு 0413 2237062 மற்றும் வாட்ஸ்-அப் எண்: 90039 96169 என்ற உதவி எண்கள் மூலம் பொதுமக்கள் நகராட்சியை தொடர்பு கொள்ளலாம்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பதில் பாரத் பந்த் நடத்திட அனைத்து கட்சி சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டது…

கோட்டக்குப்பதில் 10-வது வார்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர்.

டைம்ஸ் குழு

புதுச்சேரியில் முகக்கவசம் அணிய ஆட்சியர் அறிவுறுத்தல்!

டைம்ஸ் குழு

Leave a Comment