Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பம் மின்வாரியத்தில் மின் இணைப்பை ஆதாருடன் இணைக்க சிறப்பு முகாம்.

தமிழ்நாடு முழுவதும் மின் இணைப்பு எண்ணை ஆதார் எண்ணுடன் இணைப்பதற்கான சிறப்பு முகாம் டிசம்பர் 31ம் தேதி வரை நடைபெறுகிறது.

மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி தமிழ்நாட்டில் வீடு, கைத்தறி, விசைத்தறி, குடிசை மற்றும் விவசாய நுகர்வோர், தங்களது மின் இணைப்பு எண்ணை, ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமத்தை போக்கும் வகையில் கோட்டக்குப்பம் மின்கட்டண அலுவலகத்தில் சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் தங்களது மின் பயனீட்டு அட்டை மற்றும் ஆதார் அட்டையை நேரடியாக கொண்டு சென்று, இணைத்துக் கொள்ளலாம். அரசு விடுமுறைகளை தவிர்த்து அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் காலை 8.30 மணி முதல் மாலை 7.00 மணி வரை சிறப்பு முகாம் செயல்படும். இந்த வழிமுறைக்கு ஓடிபி(OTP) தேவையில்லை.

ஆகவே, இந்த வாய்ப்பினை நமதூர் மக்கள் பயன்படுத்தி மின் இணைப்பை ஆதாருடன் இணைத்துக் கொள்ளுமாறு கோட்டக்குப்பம் மின்வாரியம் கேட்டுக் கொண்டுள்ளது.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் பர்கத் நகரை சேர்ந்த மாணவனை பணம் பறிக்கும் நோக்கில் கடத்திய வாலிபர் கைது.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையம் நாளை திறப்பு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் அல்-ஜாமிஅத்துர் ரப்பானிய்யா அரபிக் கல்லூரியில் 75-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது

டைம்ஸ் குழு

Leave a Comment