புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
பல்வேறு நாடுகளில் கரோனா நோய்த் தொற்று மீண்டும் பரவி வரும் நிலையில், மத்திய அரசின் அறிவுறுத்தல்படி நாடு முழுவதும் இன்று கரோனா தடுப்பு ஒத்திகை நிகழ்வு நடத்தப்பட்டது.
மேலும், கரோனா நெறிமுறைகளை கடைபிடிக்க மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரியில் உள்ள கல்வி நிறுவனங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக கர்நாடகத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவர்கள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நேற்றி அறிவுறுத்தியிருந்தார்.