32.2 C
கோட்டக்குப்பம்
April 19, 2025
Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

கோட்டக்குப்பத்தில் போதை மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோட்டக்குப்பத்தில் போதை மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று 29-12-2022, வியாழக்கிழமை, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி கோட்டக்குப்பம் துணை மாவட்ட கிளை மற்றும் கியூஸ் ஆம்புலன்ஸ் சேவை சங்கம் இணைந்து இளைஞர்களை மற்றும் மாணவர்களை சீரழிக்கும் போதை மற்றும் போதைப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு தெருமுனை கூட்டம் வானூர் வருவாய் வட்டாட்சியர் திரு. கோவர்தன் அவர்கள் முன்னிலையில் கோட்டக்குப்பம் காயிதே மில்லத் ஆர்ச் அருகில் நடைபெற்றது.

இதில் கோட்டக்குப்பம் குடிபோதை மறுவாழ்வு மைய ஆலோசகர் கார்த்திகேயன் அவர்கள் போதைப் பொருட்களால் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு அறிவுரை வழங்கி மறுவாழ்வு அமைப்பது குறித்து சிறப்புரை ஆற்றினார்கள்.

தொடர்ந்து வானூர் வட்டாட்சியர் கோவர்தன் அவர்கள் இளைஞர்களை நல்வழிப்படுத்தும் இது போன்ற விழிப்புணர்வு தெருமுனை நிகழ்ச்சிகளை அதிகளவில் நடத்த சமூக ஆர்வலர்களுக்கு ஊக்கமளித்தார்கள்.

இந்நிகழ்ச்சிக்கு ரெட் கிராஸ் சேர்மன் அப்துல் ரஷீத் நிர்வாகிகள் உமா மகேஸ்வரி, பயாஸ், ரவி, முகமது அலி, மற்றும் கியூஸ் ஆம்புலன்ஸ் சேவை சங்க நிர்வாகிகள் முகமது அலி, இலியாஸ், அப்துர் ரஹ்மான், காதர் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

வெளிநாட்டு வாழ் சொந்தங்கள் அனைவருக்கும் ஈத் அல்-அழ்ஹா(பக்ரீத்) நல்வாழ்த்துக்கள்.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாா்பில் ஆம்புலன்ஸ் சேவை

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிவடைந்தது.

டைம்ஸ் குழு

Leave a Comment