Kottakuppam Times
கோட்டக்குப்பம் செய்திகள்

நகராட்சி ஆணையருடன் மமக நிர்வாகிகள் சந்திப்பு

கோட்டக்குப்பத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் நகராட்சி ஆணையர் அவர்களை இன்று(02/01/2023) சந்தித்து பல்வேறு மக்கள் பிரச்சனைகளை மணுவாக வழங்கினார்கள்.

நகராட்சியில் சமரசம் நகரின் கழீவுநீர் சாலையில் தேங்கி நின்று நோய்தொற்று பரவும் அபயாம் முறையான கழிவு நீர் வடிகால் அமைக்க. துரிதமான நடவடிக்கை எடுக்கவும், கோட்டக்குப்பம் பகுதியில் சாலையில் பொதுமக்களை அச்சுருத்தி வரும் மாடுகளை பிடித்து நடவடிக்கை மேற்க்கொள்ளவும். இதனால் ஏற்படும் உயிர்இழப்புகளை தடுத்திடவும்,

கோட்டக்குப்பம் இப்ராஹிம் கார்டன் பகுதியில் கழீவுநீர் பல அண்டுகளாக வடிகால் வசதிஇல்லாமல் சாலைiயில் தேங்கிநிற்க்கிறது, மற்றும் பரக்கத் நகர் பழைய இந்தியன் வங்கி அருகில் காலையில் மின் மோட்டார் மூலமாக இறைக்கப்படும் கழீவுநீரால் துர்நாற்றமும் வீசி வருகிறது, அவ்விடத்தில் காங்கிரட் சிலாப் அமைக்கவும் முறையிடப்பட்டுள்ளது.

பல்வேறு மக்கள் படும் பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டி உடனடியாக நடிவடிக்கை மேற்கொள்ளுமாறும் நிர்வாகிகள் முன் வைத்தனர் .

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி நகர தலைவர் அபுதாஹிர் தலைமையில், நகரசெயலாளர்
நஜிர் அஹமது, நகர செயலாளர் தமுமுக ஜரீத், நகர பொருளாளர் முஹம்மது யூசுப், நகர துணை செயலாளர் அப்துல் ஜப்பார், பரக்கத் நகர் பொருப்பாளர் ஆபிதீன் மற்றும் நிர்வாகிகள் ஆணையர் அவர்களை இன்று மாலை சந்தித்தார்கள்

போராசிரியர் MHJ ஜவாஹிருல்லா MLA அவர்கள் எழுதிய நபிகளாரின் சமூக உறவு என்கின்ற புத்தகத்தை ஆணையர் அவர்களுக்கு நகர தலைவர் அபுதாஹிர் அவர்கள் வழங்கினார்கள்.

கோட்டக்குப்பம் டைம்ஸ் குழுமங்களில் நீங்களும் இணைய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யவும்.
Whatsapp/வாட்ஸ்அப் - https://chat.whatsapp.com/KSeochPqrwG7AKSEezvkC2
Telegram/டெலிகிராம் - https://t.me/KtmTimes

Related posts

கோட்டக்குப்பம் அணைக்குடியார் தெரு முன் பகுதியில் சைடு வாய்க்கால் அமைக்க கோரி நகர்மன்ற தலைவர் மற்றும் கவுன்சிலருக்கு மனு.

டைம்ஸ் குழு

கோட்டக்குப்பதில் நாளை 26-வது மெகா தடுப்பூசி முகாம்.

டைம்ஸ் குழு

கோட்டகுப்பதில் கஜா புயலுக்கு பிறகு கடல் சீற்றமாகவே காணப்படுகிறது..

Leave a Comment