நாட்டின் 74-வது குடியரசு தினம் இன்று(26/01/2023) வியாழக்கிழமை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதையொட்டி கோட்டக்குப்பம் அஞ்சுமன் நூலகம் மற்றும் இஸ்லாமிய அறிவு மையம் சார்பில் தேசியக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி இன்று காலை 7:30 மணி அளவில் நடைபெற்றது.
நிகழ்ச்சியின் தொடக்கத்தில், அஞ்சுமன் நூலகம் செயலாளர் லியாகத் அலி அவர்கள் குடியரசு தின வரலாற்றின் முக்கியத்துவத்தைப் பற்றி எடுத்துரைத்தார்.
நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளர் இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநிலத் துணைத்தலைவர் ஜி. ஜலாலுதீன் அவர்கள் தேசியக் கொடி ஏற்றி, இந்தியாவுக்காக உருவாக்கப்பட்ட அரசியல் அமைப்பு சட்டம் குறித்து சிறப்புரையாற்றினார்.
நிகழ்வில் சமூக நல்லிணக்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹசன், அஞ்சுமன் நிர்வாகிகள், உறுப்பினர்கள், பொதுமக்கள், மதரசா மாணவர்கள் திரளாக கலந்து சிறப்பித்தனர்.
மேலும், அஞ்சுமன் வளாகத்தில் நடைபெற்ற கல்வி, சமூகநல உதவிகள் வழங்கும் நிகழ்வு அஞ்சுமனின் துணைத் தலைவர் கோஸி. முஹம்மது இலியாஸ் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வில் சமூக நல்லிணக்க முன்னணியின் ஒருங்கிணைப்பாளர் இனாமுல் ஹசன் சிறப்புரையாற்றினார்.
சட்ட மேற்படிப்பு பயிலும் மாணவர், நர்சிங் பயிலும் மாணவர், ஹெமரிக்ஸ் மறுவாழ்வு மையம் உள்ளிட்ட பயனாளிகளுக்கு நிதி உதவி வழங்கப்பட்டது. அஞ்சுமனின் உயர்மட்ட ஆலோசகர்கள் ஹாஜி வி.ஆர். முஹம்மது இப்ராகிம், ஹாஜி அ.ர. அப்துல் குத்தூஸ், கோட்டக்குப்பம் குவைத் ஜமாஅத் பொறுப்பாளர் சாதிக் பாஷா, அஞ்சுமன் நிர்வாகக் குழு பொறுப்பாளர்கள் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்