‘பொதுமக்களின் வசிப்பிடத்துக்கு அருகிலேயே சிகிச்சை அளிக்க வசதியாக, அனைத்து மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் நகர்புற நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்படும்’ என முதல்வர் ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி, கோட்டக்குப்பம் ஷாதி மஹால் தெருவில் அமைந்திருக்கும் சிதலமடைந்து தாய் சேய் நல மைய கட்டிடத்தை இடித்து விட்டு, அதே இடத்தில் புதியதாக நகர்புற நலவாழ்வு மையம் அமைக்க வேண்டும் என்று நகர மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை வைத்தனர். அந்த கோரிக்கையை ஏற்று 18-வது வார்டில் நகர்புற நல வாழ்வு மையம் அமைக்க நகராட்சி மன்ற தலைவர் திரு S.S. ஜெயமூர்த்தி அவர்கள் ஒப்புதல் அளித்துள்ளார்.
ஒரு டாக்டர், மருந்தாளுனர், செவிலியர், உதவியாளர் கொண்ட நகர்புற நலவாழ்வு மையம் அமைக்க பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு அளித்த கோட்டக்குப்பம் ஜாமிஆ மஸ்ஜீத் நிர்வாகிகள், நகர மன்ற துணை தலைவர், நகர மன்ற உறுப்பினர்கள், கோட்டக்குப்பம் ஆணையர் அனைவருக்கும் மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.